dinamalar telegram
Advertisement

லட்சுமிபுரம் அணை நிரம்பியது

Share
பொன்னேரி; ஒருநாள் மழையில், ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி வழியும் நிலையில், 1,000 கன அடி உபரி நீர் வெளியேறுகிறது.பொன்னேரி அடுத்த, லட்சுமிபுரம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு, நேறறு முன்தினம் மாலை வரை, நீர்வரத்து குறைவாகவே இருந்தது.நேற்றுமுன்தினம் காலை, முதல், நேற்று அதிகாலை வரை பெய்த மழையால், ஆரணி ஆற்றுக்கு, பல்வேறு கால்வாய்கள் மூலம் நீர்வரத்து அதிகரித்து, நிரம்பி வழிகிறது.அணைக்கட்டு நிரம்பியதை தொடர்ந்து, ஷெட்டர்கள் திறக்கப்பட்டு, காட்டூர், பெரும்பேடு ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணைக்கட்டில் இருந்து, வினாடிக்கு, 1,000 கன அடி உபரிநீர் வெளியேறி, ரெட்டிபாளையம் அணைக்கட்டு நோக்கி செல்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement