பலவீனமானது ஏரிக்கரை
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பகுதியில், பொதுப்பணித் துறை - நீர் ஆதாரம் - கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில், கும்மிடிப்பூண்டி ஈசா பெரிய ஏரி, 158 ஏக்கர் உடையது.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி, தற்போது, 75 சதவீதம் நிரம்பியுள்ளது.இரு மாதங்களுக்கு முன், அந்த ஏரியின் கரையை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இருப்பினும், தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கரையானது, தொடர் மழையால் கரைந்து ஓடி, தற்போது பலவீனமாக உள்ளது.உடைப்பு ஏற்பட்டால், சேமித்த தண்ணீர் வீணாவதுடன், தேசிய நெடுஞ்சாலை, மூழ்கும் அபாயத்தில் உள்ளது.பொதுப்பணித் துறையினர், துரித நடவடிக்கை எடுத்து, பலவீனமாக உள்ள பகுதியை பலப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!