dinamalar telegram
Advertisement

பூண்டி நீர்த்தேக்கம் திறப்பு

Share
ஊத்துக்கோட்டை : பூண்டி நீர்த்தேக்கம் தன் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், பாதுகாப்பு கருதி, நான்கு மதகுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு, 1,000 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், கொற்றலை ஆற்றின் நடுவே, பூண்டியில் உள்ளது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். இதன் முழு கொள்ளளவு, 3.2 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. கிருஷ்ணா நீர் மற்றும் மழை நீர் முக்கிய நீர் ஆதாரம்.கடந்த செப். மாதம் துவக்கத்தில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் காணப்பட்ட பூண்டி நீர்த்தேக்கம், செப்.,21ம் தேதி முதல், கிருஷ்ணா நீர் வரத்தால், நீர்மட்டம் உயரத் துவங்கியது.'நிவர்' புயல் காரணமாக பெய்த தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நீரால், நீர்மட்டம் 33.30 அடியை தொட்டது.

நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. வினாடிக்கு, 9,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 2.5 டி.எம்.சி., நீர் உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று மாலை, 5:45 மணிக்கு, அங்குள்ள, 16 மதகுகளில், நான்கு மதகுகள் வழியே வினாடிக்கு, 1,000 கன அடி வீதம், தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் வெளியேறுவதை பார்க்க உள்ளூர் மக்கள் குவிந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement