Advertisement

'சமாளிப்பு' அதிகாரி!

  • எழுத்தின் அளவு:

'சமாளிப்பு' அதிகாரி!



திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வெங்கிட்டாபுரத்தில், நீராதார குளத்தை மூடி, மின் மயானம் அமைக்கப்படுவதாகக் கூறி, ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணிகள் நிறுத்தப்பட்டன.இதையடுத்து, 'மின் மயானம் வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள், பல்லடத்தில் கடையடைப்பு நடத்தியதால், மீண்டும் பணிகளை தொடர, அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல் தினத்தன்று, 'மின் மயானம் கட்டக் கூடாது' என, வெங்கிட்டாபுரம் பொதுமக்கள், தேர்தலை புறக்கணித்தனர். அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்து, ஓட்டளிக்கச் செய்தனர். அதிகாரி ஒருவர், 'மத்தளம் போல, இரு பக்கத்திலும் அடி வாங்குறோமே...' என்றார். அருகிலிருந்த, உயர் அதிகாரி, 'ரெண்டு தரப்புகிட்டேயும், 'நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, ஒரே பதிலை சொல்லு பா...' என்றார்.

இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'இந்த மாதிரியான அதிகாரிகளால தான், பிரச்னை எதுவும் தீராமயே கிடக்குது...' என, வருத்தப்பட்டு,

நடையைக் கட்டினார்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)