Advertisement

வம்புக்கு இழுக்காதீங்க!

  • எழுத்தின் அளவு:

வம்புக்கு இழுக்காதீங்க!



'இதென்ன புது பிரச்னையா இருக்கே... எந்த ஊர் நியாயம் இது...' என, பா.ஜ., தலைவர்களை பார்த்து கொதிக்கிறார், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர், ராஜ் தாக்கரே.மஹாராஷ்டிராவில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., - காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக, பலம் வாய்ந்த கட்சியாக இருப்பது, நவநிர்மாண் சேனா.இந்த கட்சி, இதுவரை நடந்துள்ள தேர்தல்களில், பெரிய அளவில் வெற்றி பெற்றது இல்லை. ஆனாலும், ராஜ் தாக்கரேக்கு, கணிசமான செல்வாக்கு உண்டு. அதிலும், அவரின் உணர்ச்சிகரமான பேச்சுக்கு, மகுடியாக கட்டுப்படும் இளைஞர்கள், மஹாராஷ்டிராவில், ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

ராஜ் தாக்கரே மைக் பிடித்தால் போதும், என்ன வேலையிருந்தாலும், அப்படியே விட்டு விட்டு, அவரது பேச்சை கேட்பதற்கென்றே, ஒரு கூட்டம் உள்ளது.தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில், நவநிர்மாண் சேனா கட்சி போட்டியிடவில்லை. அதற்கான காரணம் எதையும், கட்சி தலைவர்கள் விளக்கவில்லை.ஆனாலும், மாநிலம் முழுவதும் சென்று, பா.ஜ.,வுக்கு எதிராக, கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார், ராஜ் தாக்கரே. பா.ஜ., தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.இதனால் கடுப்பான, பா.ஜ., தலைவர்கள், 'ராஜ் தாக்கரே நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கான செலவை, காங்., கட்சிக் கணக்கில் சேர்த்து விடுங்கள். ராஜ் தாக்கரே, காங்கிரசின், இன்னொரு பிரிவு' என, தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளனர்.டென்ஷனான, ராஜ் தாக்கரே, 'எங்கள் கட்சி, தேர்தலில் போட்டியிடவே இல்லை. எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?' என, ஆவேசப்படுகிறார்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)