Advertisement

பதற்றம்!வெடி குண்டு நிரப்பிய லாரி ஊடுருவல்; இலங்கையில் மீண்டும் பரபரப்பு

  • எழுத்தின் அளவு:

கொழும்பு:வெடி குண்டு நிரப்பப்பட்ட லாரியும், வேனும், இலங்கை தலைநகர் கொழும்புக்குள் ஊடுருவியதாக, பாதுகாப்புஅதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து,நாடு முழுவதும், மீண்டும் பதற்றமும், பீதியும் நிலவியது. அனைத்து வாகனங்களிலும், போலீசார், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

nsimg2261640nsimg

அண்டை நாடான, இலங்கையில், சமீபத்தில், ஈஸ்டர் பண்டிகை அன்று, தேவாலயங்கள், நட்சத்திரஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில், அடுத்தடுத்து, சக்தி வாய்ந்தகுண்டுகள் வெடித்தன.இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 38 பேர் உட்பட, 321 பேர், உடல் சிதறி பலியாகினர். மேலும், 500க்கும் மேற்பட்டோர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

nsmimg686256nsmimg


தீவிர சோதனைஇந்த கொடூர தாக்குதலுக்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் நெருக்கடி நிலை அமல்படுத்தப் பட்டு உள்ளது. கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தலைநகர் கொழும்புக்குள், பயங்கர வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட லாரியும், வேனும் ஊருவியுள்ளதாக, துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், போலீசாருக்கும், ராணுவத்திற்கும், நேற்று, தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கொழும்பு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களிலும், போலீசார், தீவிர சோதனை நடத்தினர்.

nsmimg686257nsmimg


நகருக்குள் ஏற்கனவே உள்ள, லாரி, வேன், கார்உள்ளிட்ட வாகனங்களிலும், சோதனை நடத்தினர். இந்த தகவலை அடுத்து, கொழும்பு மட்டுமல்லா மல், இலங்கை முழுவதும், பீதியும், பதற்றமும்நிலவியது.இதற்கிடையே,

இலங்கை யில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, சர்வதேச பயங்கவாத அமைப்பான, 'இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்' எனப்படும், ஐ.எஸ்., பொறுப்பேற்று ள்ளதாக, நேற்று மாலை, தகவல் வெளியானது.'அமக்' என்ற செய்தி நிறுவனத்தின் மூலமாக, ஐ.எஸ்., அமைப்பு, இந்த தகவலை வெளியிட்டு உள்ளதாக, இலங்கை புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைச் சேர்ந்த, கிறிஸ்துவ மக்களை குறி வைத்து, இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக, இலங்கை பார்லிமென்ட், நேற்று அவசரமாக கூடியது. இதில், இலங்கை ராணுவ இணை அமைச்சர், விஜேவர்த்தனே கூறியதாவது: தொடர் குண்டு வெடிப்புகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சில முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன.நியூசிலாந்து நாட்டின், கிறைஸ்ட் சர்ச் நகரில், கடந்த மாதம், 15ல், இரண்டு மசூதிகளில், துப்பாக்கி யுடன் புகுந்த ஒரு நபர், சரமாரியாக சுட்டான்.இதில், மசூதிகளில் இருந்த, 50 பேர் பலியாகினர்; இது, உலகம் முழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்குவதற்காகவே, கிறிஸ்துவ மக்களை குறிவைத்து, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளதாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இலங்கையில் குண்டு வெடிப்புகள் நடப்பதற்கு முன், உள்ளூரைச் சேர்ந்த ஒரு அமைப்பின் உறுப்பினர், நியூசிலாந்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்தை, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இந்த தாக்குதல் தொடர்பாக, இதுவரை, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மனித வெடி குண்டுகளாக செயல்பட்ட ஏழு பேரும், இலங்கை யில் உள்ள, உள்ளூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது பின்னணி

குறித்தும் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.கவலை:


இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது:சர்வதேச பயங்கரவாதத்தின் கரங்கள், இலங்கையையும் எட்டியுள்ளது என்பது, கவலை அளிக்கிறது. இலங்கையில், இதுவரை நடந்த தாக்குதல்களை விட, இது, கொடூரமானது என்பதில்,எந்த சந்தேகமும் இல்லை.நாட்டில் உள்ள எல்லா முஸ்லிம் அமைப்புகளும், இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு சிலருக்கு மட்டுமே, இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என், தெரியவந்துள்ளது.இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையை, வெற்றிகரமாக முறியடித்து, விரைவிலேயே இயல்பு நிலையை ஏற்படுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.நான், அதிபர் பதவியிலிருந்து விலகியபோது, நாட்டில், அமைதி நிலவியது. பயங்கரவாதம் இல்லாத நாட்டை, ஒப்படைத்து விட்டுச் சென்றேன். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள், உள்நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல், பயங்கரவாதத்தை வளர அனுமதித்து விட்டனர்.ராஜபக்சேஇலங்கை முன்னாள் அதிபர்மன்னிப்பு கேட்டது இலங்கை அரசுஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளை தடுக்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு, இலங்கை அரசு, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து, இலங்கை அரசு செய்தி தொடர்பாளர், ரஜிதா சேனரத்னே கூறியதாவது: இலங்கை யில் தாக்குதல் நடத்த, சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள், முன்கூட்டியே எச்சரித்திருந்தன.அதுகுறித்து, அரசு பரிசீலித்தது. ஆனாலும், தாக்குதல்களை தடுக்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக, பாதிக்கப்பட்ட மக்களிடம், அரசு தரப்பில் மன்னிப்பு கோருகிறோம். பாதிக்கப் பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப் படும். குண்டு வெடிப்புகளில் சேதம் அடைந்த தேவாலயங்கள், அரசு செலவில் சீரமைக்கப் படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்தியர்கள் 10 பேர் பலிஇலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு களில், இந்தியாவைச் சேர்ந்த, எட்டு பேர் பலி யானதாக, நேற்று முன்தினம் கூறப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த, பட்டு ராஜா, மேரி கவுடா ஆகியோரின் உடல்கள், அடையாளம் காணப்பட்டன. இதை அடுத்து, இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தி யர் எண்ணிக்கை, 10 ஆக அதிகரித்து ள்ளது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (24)
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஏப்-2019 14:30 Report Abuse
ஆரூர் ரங் வெடிப்பு நிகழ்ந்தவுடனே முதல் கருத்தாக நான் போட்டது நிஜம்தானே (நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்கும் பதிலடியாகக்கூட இருக்கலாம். இலங்கை முஸ்லிம்களிலும் அதிகம் பேர் வஹாபி, ஐ எஸ் ஆதரவாளர்களாகிவிட்டதாக செய்திகள் வந்தபோதே அரசு விழித்துக்கொள்ளவில்லை. இலங்கை கிறித்தவர்களிலும் 80% க்குமேல் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. ) முஸ்லிம் தோழர்களுக்கு மத்தியிலேயே வளர்ந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஏப்-2019 14:16 Report Abuse
ஆரூர் ரங் இறுதி நாள் நெருங்கும் போது பூமியில் அறியாமை பெருகி விடும், மடையர்கள் பெருகி விடுவார்கள், மடையர்கள் மார்க்க தலைவர்களாக வருவார்கள், அவர்கள் தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுப்பார்கள் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
dandy - vienna,ஆஸ்திரியா
24-ஏப்-2019 15:14Report Abuse
dandyஇன்னும் 4 ம் நூற்றாண்டு பித்தட்டல்களை நம்பினால் குண்டு போடவே சொல்லலும் ...கபீர் எதிரிகள் ஆனால் அவர்கள் கண்டு பிடிப்புகளை எல்லாம் நாங்கள் விரும்பி பாவிப்போம் FACE BOOK முதலாளி ஒரு யூதன் ...இன்று இதில் இல்லாத ஆண் ..பெண் மார்க்க ரசிகர்கள் இல்லை...
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
26-ஏப்-2019 04:03Report Abuse
aryajaffna...
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஏப்-2019 10:22 Report Abuse
R.PERUMALRAJA முதல்வன் படத்தில் ரகுவரனே குண்டை வைத்து , பின் வெடிக்க செய்து மக்களை திசை திருப்பியது போல தான் ....அல்லது ,ராஜபக்ச அவனது ராணுவ அதிகாரிகளை அவன் விருப்பப்பட்ட இடத்திற்கு மாற்றி ,வரும் தேர்தலில் வெல்வதற்கு தான் .
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஏப்-2019 13:16Report Abuse
Yaro Oruvanநீங்க திருந்தமாடீங்க பாய்.. சரி விடுங்க..- நிமுத்தவா முடியும் நியூஸிலாந்துல நடந்த அட்டாக் வன்மையா கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதில் மாற்று கருத்து இல்லை.. ஒரு மதவெறி பிடித்த பைத்தியக்காரன் தான் பிரான்சில் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் தூண்டுதலால் அந்த பாவத்தை செய்துள்ளான்.. அவன் வாழ தகுதி அற்றவன் மரண தண்டனை கொடுத்து சாவடிக்க வேண்டும்.. சரி இப்போ இலங்கை மேட்டருக்கு வருவோம்.. இது தனி மனிதன் உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியம் அல்ல.. ஒரு கும்பலால் மூளை சலவை செய்யப்பட்டு, அப்பாவி மக்களை கூண்டோடு கொள்ள தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளனர்.. இது தீர யோசிச்சு என்ன செய்றோம்னு தெரிஞ்சி பல பேர் ஒத்துழைப்புடன் (உள்ளூர்வாசிகள் உட்பட) தாக்கி உள்ளனர்.. இதுக்கு நீ முட்டு கொடுக்குற இந்த புத்தியைத்தான் மத தீவிரவாதம் என்கிறோம்.. அங்கு தாக்குதல் நடத்தியவனுக்கு நிச்சயம் இந்நேரம் பல _____ களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டிருக்கும்.. இத தூக்கி ராஜபக்ஷே மேல போட்டுட்டு நீ முட்டு கொடுக்குற மதத்தை கேவலத்தனம்.. ஒரு கும்பல் என்னடான்னா ஊர் ஊரா போயி மூளை சலவை செய்யுது.. இன்னொரு கும்பல் பிளான் செஞ்சி குண்டு வச்சி கொத்து கொத்தா கொல்லுது.. ஆனா இங்க பாஜக மதவாத கட்சின்னு சவுண்டு விடுறது.. இந்த குண்டு வெடிப்பை நடத்திய கும்பலை கண்டித்து திட்ட துப்பில்லை.. கேட்டா என்னையவுட அமைதியான ஆளு லோகத்துல இல்லைன்னு சவடால்..புள்ள குட்டிகளியாவது படிக்க வைங்கப்பா.. பள்ளி கூட்டத்துல...
Shekar - Mumbai,இந்தியா
24-ஏப்-2019 13:46Report Abuse
Shekarஇல்லை , பெருமாள் ராஜா, சர்ச் க்கு போனவர்கள் அனைவரும் மடியில் ஆளுக்கு ஒரு குண்டை கட்டிக்கொண்டு சென்றனர். ஆனால் இப்போது அப்பாவி அஹிம்சையுள்ள IS மேல் பழி போடுகிறார்கள். (குறிப்பு: தமிழன் இவ்வளவு மட சம்பிராணியா?)...
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
24-ஏப்-2019 10:10 Report Abuse
Mohamed Ilyas விடுதலை புலிகள் நடத்திய கொண்டு வெடிப்புகளோடு ஒப்டிடும் பொது இது ஒன்று இல்லை , காத்தான்குடியில் பெருநாள் அன்று தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை கொன்று குவித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஏப்-2019 18:01Report Abuse
Yaro Oruvanமுட்டு கொடுக்க ஆரம்பிச்சுட்டியல்ல.. ஒத்துக்கவும் செய்ற இது நம்ம கும்பல்தான்னு.. இனிமே நாங்கதான் அமைதிப்புறாக்கள் அது இதுன்னு பெனாத்தப்புடாது.....
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
24-ஏப்-2019 19:37Report Abuse
Rasu Kuttyஅவுரங்கசீப் போன்ற பொறுக்கிகள் இந்துக்களை கொன்றான் கோவில்களை இடித்து தரை மட்டமாக்கினான் என்பதற்க்காக இப்போது மார்கத்தினரை பழி தீர்த்தல் எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கு நீங்கள் குடுக்கும் முட்டு...
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-2019 08:08 Report Abuse
Srinivasan Kannaiya கொத்தாக கொத்தாக தமிழர்களை கொன்று குவித்தார்களே... இன்னும் மனது வலிக்கிறது...
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஏப்-2019 08:06 Report Abuse
Srinivasan Kannaiya விடுதலை புலிகள் இருந்து இருந்தால்... அவர்களை பழித்து இருப்பார்கள்..
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24-ஏப்-2019 07:49 Report Abuse
ஆரூர் ரங் உள்ளூர்கார சொந்த மதத்தவரின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் உதவியுமிலலாமல் ஐ எஸ் இந்த நாசகார வேலையை செய்திருக்கவே முடியாது .இப்போது இலங்கை ராணுவமும் போலீசும் குடியிருப்புகளில் நுழைந்து கடுமையாக சோதிப்பது வேதனைத்தரும் விடயம். இதன் மூலகாரணம் என்ன? தப்பித்தவறி பயங்கரவாதத்தை யாராவது லேசாக ஆதரித்தாலும் அந்தந்த சமுதாயத்தினர் உடனடியாக தலையிட்டு திருத்தவேண்டும். எப்படி அரேபிய நாடுகளில் மாற்றுமத மதமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளதோ அதுபோல இலங்கையும் ஒரு பவுத்தமத நாடு என்பதை அங்குள்ள தவ்ஹீத் போன்ற இயக்கங்கள் நினைக்கவேண்டும். அதனை மறந்துவிட்டு பவுத்தர்களையும் இந்துக்களையும் மதமாற்றம் செய்துவருவதாக இலங்கை புத்த சாமியார்கள் நடத்தும் பொதுபல சேனா ஆதாரங்களைகாட்டி கூறிவருகிறது . மதம் மாறியவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுளதாக நம்பி அவர்களது உறவினர்கள் ஆத்திரத்தில் பொதுபல சேனா போன்ற வன்முறை இயக்கங்களை ஆதரிக்கிறார்கள் .ஆகமொத்தம் மதமாற்றம் நபிகள் நாயகம் ஆசைப்பட்ட அமைதியை வளர்க்காமல் பயங்கரவாதத்தை வளர்ப்பதில் மட்டுமே முடிகிறது என்பதை அவர்கள் உணரட்டும் . மதத்தை அவரவர் வீடு வழிபாட்டோடு நிறுத்துவது அங்குள்ள இஸ்லாமியருக்கு நல்லது .முதலில் தான் ஒரு நாட்டுக் குடிமகன் அதற்குப்பின்புதான் இஸ்லாமியன் எனும் நினைவு மிகவும் நன்மை தரும்
svs - yaadum oore,இந்தியா
24-ஏப்-2019 07:21 Report Abuse
svs இந்த படத்தில் உள்ளவர்களை பார்த்தால் எல்லாம் அப்பாவிகள் ... அன்றாடம் காய்ச்சிகள்... இவர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் மீது குண்டு வீசி கொன்று ஆகப்போவது என்ன?? இதனால் பெரும் பாவம் தான் வந்து சேரும்.. மனித வெடி குண்டுகளாக ஏழு பேராம்... இவர்களை வீட்டில் யாரும் தட்டி கேட்பதில்லையா?? இவர்களை தூண்டி விடுவது வேறு யாரோ என்கிறார்கள். தூண்டிவிட்டால் இவர்கள் ஏன் கேட்கிறார்கள்? விடுதலை புலிகள் என்கிறார்கள்... விடுதலை புலிகள் அரசியல் பிரச்சனை...அது மத பிரச்சனை கிடையாது..விடுதலை புலிகள் பற்றி மறைந்த சோ ராமசாமி என்ன எழுதினார் என்று பாருங்கள் .... வன்முறையை என்றும் நியாய படுத்த முடியாது .....
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-ஏப்-2019 07:13 Report Abuse
அசோக்ராஜ் பல்லாண்டுகளாக வடக்கில் இந்திய மீனவர்களை விரட்டுவதிலேயே பொழுது போக்கிக்கொண்டிருந்த இலங்கை, மற்ற மூன்று திசைகளிலும் கோட்டை விட்டிருக்கிறது. இனிமேலாவது எச்சரிக்கையா இருக்கட்டும்.
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
24-ஏப்-2019 06:38 Report Abuse
Palanisamy Sekar மனித அரக்கர்கள்.. மத வெறி அரக்கர்கள்.. இதைத்தான் எப்போதும் எதிர்க்கின்றேன்.. மதவெறி என்பது இப்படித்தான் இறுதிக்கு கொண்டு செல்லும். அது எந்த மதமானாலும் சரி. மதம் பிடித்துப்போனால் அடக்குவது கடினம்தான் என்றாலும் அடக்கிவிடலாம்தான். அதனால் பெரியோர்களே.. சிறுவர்களே.. மதங்களை சுமக்காதீர்கள்.. அது இப்போது சுகமாகத்தான் இருக்கும்..போகப்போக இதோ இலங்கையில் நடக்கின்ற கொடூரமாகத்தான் முடியும்...புரிந்தவர்கள் இனி திருந்துவார்கள் என்று நம்புவோமே. ஐ எஸ் ஐ எஸ் போன்ற அமைப்பினை போன்றே இப்போதெல்லாம் வேறுவடிவில் கட்சி ரூபத்திலும் இருக்கின்றது. உஷார் கொழும்பு மக்களை போன்றே அணைத்து மக்களுக்கும் உஷாராக இருங்கள்..நல்ல எண்ணங்களை சுமப்பீராக..கடவுள் துணையோடு நடக்க இருக்கும் நிகழ்வுகளும் தடுக்கப்படும்..மதவெறியர்களும் அடக்கப்படுவார்கள்..நம்பிக்கையோடு இருப்போம்..
IRSHAD - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஏப்-2019 11:22Report Abuse
IRSHADநீங்கள் சொன்னது100சதவீதம் உண்மை .அவர்கள் அரக்கர்கள் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை .இஸ்லாம் அவர்களை ஏற்றுக்கொள்ளாது ,இவர் வயிற்றுப்பிழைப்புக்காக வேலை செய்யும் கூலிகள் நிச்சயமாக isis ஐ சேர்ந்தவர்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை .அவர்களுக்கு புதிதாக அரக்கர்கள் மதம் என்று பெயர் கொடுக்கலாம் .ஏன் என்றால் ஒரு மனித உயிரை எடுக்கும் உரிமை ஒரு இஸ்லாமியனுக்கும் இல்லை .அவனுக்கு மன்னிப்பும் இல்லை....
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
24-ஏப்-2019 19:44Report Abuse
Rasu Kuttyஇர்ஷாத் சார், இந்த வாக்கியம் எந்த நூலில் உள்ளது என்று படித்து தெரிந்துகொள்ளவும்.. Soon shall We terror into the hearts of the Unbelievers...
kannan - Madurai,இந்தியா
27-ஏப்-2019 11:47Report Abuse
kannanமுதன் முதலாக மனித நேயத்தைப்பற்றி பேசிய ஒரு உண்மையான முஸ்லிமை காண்கிறேன். வணக்கம் சகோதரரே ....
மேலும் 5 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)