Advertisement

மாணவர் பெருமன்றம்மாநிலக்குழு கூட்டம்

  • எழுத்தின் அளவு:

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாநிலக்குழு கூட்டம் நடந்தது.விழுப்புரம் இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தினேஷ், இந்திய கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில், விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் கொண்டுவரப்படவுள்ள ைஹட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்கும் அரசின் முடிவை கண்டித்து, ஜூன் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள சி.இ.ஓ., அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, மாநில துணை செயலாளர்கள் பூர்ணிமா நந்தினி, ராமசாமி, துணை தலைவர்கள் பிரகாஷ், தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.துணை தலைவர் முகில் நன்றி கூறினார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)