Advertisement

கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை

  • எழுத்தின் அளவு:

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி தினமான நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.மாலையில் காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, மந்திர ஜெபம் வாசித்து பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)