Advertisement

ஆக்கிரமிப்பில் சிக்கிய மக்கள்

  • எழுத்தின் அளவு:

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாகனங்களின் ஆக்கிரமிப்பால் குறுகிக்கிடக்கும் குளத்து மேட்டுத் தெருவில் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர்.கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்டை ஒட்டியபடி குளத்து மேட்டு தெரு உள்ளது. குறுகலான இந்த தெருவில் வணிக நிறுவனங்கள் பெருகியதால் தினமும் அவ்வழியாக லோடு ஏற்றிச்செல்லும் வாகனங்களின் வரத்து அதிகரித்துள்ளது.மேலும், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் பைக்குகளை வரிசையாக தெருவோரம் நிறுத்து விடுகின்றனர்.இதனால் அந்த சாலை அடைபட்டு நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு குறுகளாக உள்ளது. வணிக நிறுவனங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் முதல் அங்கு குடியிருக்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வரை அனைவரும் மிகவும் அவதியடைகின்றனர்.எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)