Advertisement

மூதாட்டியிடம் திருட முயற்சி: பெண்ணை வளைத்த மக்கள்

  • எழுத்தின் அளவு:

சேலம்: மூதாட்டியிடம் திருட முயன்ற பெண்ணை, மக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் பாலகுமார், 33. இவரது தாய் நாகம்மாள், 59. இருவரும், நாமக்கல் செல்ல, நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, திருவாக்கவுண்டனூர் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர், நாகம்மாளின் கைப்பையை எடுத்துக்கொண்டு ஓட முயன்றார். பாலகுமார், சக பயணியர் ஒத்துழைப்புடன், அப்பெண்ணை சுற்றிவளைத்து பிடித்து, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். விசாரணையில், நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே, சர்கார்தோப்பைச் சேர்ந்த, ராமசாமி மனைவி சரசு, 41, என்பதும், திருடுவதையே தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனால், அவரை, போலீசார் கைது செய்தனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)