Advertisement

குரங்குகள் சேட்டை: வனத்துறை அசட்டை

  • எழுத்தின் அளவு:

மகுடஞ்சாவடி: சித்தர்கோவில் பகுதியில், குரங்குகள் சேட்டையால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து, வனத்துறையினரும் கண்டுகொள்வதில்லை.


சேலம், சித்தர்கோவில் பகுதியில், சத்யா நகர், சித்தேஸ்வரா நகர், பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி அருகே, கஞ்சமலை உள்ளது. அங்கு, 3,000க்கும் மேற்பட்ட குரங்குகள் உலா வருகின்றன. ஆனால், போதிய உணவின்றி, சித்தேஸ்வரன் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் கொண்டு வரும், தேங்காய், பழம் உள்ளிட்ட தின்பண்டங்களை பறிக்கின்றன. விரட்டும்போது, கடிக்க முயற்சிப்பதால், பக்தர்கள் அச்சப்படுகின்றனர். மேலும், கூட்டம் கூட்டமாக சென்று, அருகிலுள்ள வீடுகளில் புகுந்து, உணவு பொருட்களை சாப்பிடுகின்றன. சிலரை, கடித்து விடுவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.


இதுகுறித்து, கோவில் ஊழியர்கள் கூறியதாவது: சில ஆண்டாக, வெளியூரில்வாசிகள், அங்கு சுற்றும் குரங்குகளை பிடித்துவந்து, இரவில் வந்து, சித்தர்கோவில் பகுதியில் விட்டுச் செல்கின்றனர். இதனால், குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குரங்குகள், உணவை தேடி, அருகிலுள்ள குடியிருப்பு, கடைகளிலும் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதுகுறித்து, வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அவர்கள், குறைந்தளவில் குரங்குகளை விட்டுவிட்டு, மற்றவற்றை பிடித்து, ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் விட, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)