Advertisement

வடிகாலுக்கு பாறை உடைப்பு சர்வீஸ் ரோடு பணி தீவிரம்

  • எழுத்தின் அளவு:

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், மழை நீர் வடிகால் கட்டுவதற்காக பாறையை உடைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிணத்துக்கடவில் மேம்பாலத்தை ஒட்டிஅணுகுபாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை ஒட்டி கிழக்கு பகுதியில் சர்வீஸ் ரோடு போடப்பட்டது.


ரோட்டின் ஓரத்தில் மழை நீர் வடிகால் கட்டும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மழை நீர் வடிகாலானது மேம்பாலம் நிறைவடையும் சாலைப்புதுார் வரை கட்டப்படுகிறது.ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், வடிகால் கட்டுவதற்காக குழி எடுக்கப்பட்டது. அங்கு பாறை தென்பட்டதால், 'பவர் டில்லர்' மூலம் பாறை உடைக்கப்படுகிறது.


இந்த பணி முடிந்ததும், மழை நீர் வடிகால் கட்டும் பணி முழுமையடையும் என தெரிகிறது.மழை நீர் வடிகால் கட்டுவதற்காக, ரோட்டின் ஓரத்தில் தோண்டப்பட்ட குழியால், பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.மேலும், கார், பைக், டெம்போ போன்ற வாகனங்கள் இரவு நேரத்தில் குழிக்குள் விழும் அபாயமும் உள்ளது. எனவே, இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)