Advertisement

வி.ஏ.ஓ., மீது தாக்குதல்

  • எழுத்தின் அளவு:

புல்லரம்பாக்கம்:கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய வாலிபர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.திருவள்ளூர் வட்டம், புல்லரம்பாக்கம், கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர், சீனிவாசன், 52. இவர், 13ம் தேதி, புல்லரம்பாக்கம் மாந்தோப்பில், ஆண் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று பார்வையிட்டார்.அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த, குமரேசன், 26, ஆகாஷ், 26, இருவரும், கிராம நிர்வாக அலுவலரை ஆபாசமாகத் திட்டி, தாக்கிஉள்ளனர்.இது குறித்து, புல்லரம்பாக்கம் போலீசில், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)