Advertisement

வெறிநாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

  • எழுத்தின் அளவு:

நாமக்கல்: நாமக்கல்லில், வெறிநாய்கள் கடித்து, ஐந்து ஆடுகள் பலியாகின. நாமக்கல் அடுத்த, செல்லப்பா காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரி. 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை, அருகில் உள்ள விவசாய நிலத்தில், நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில், சம்பவ இடத்திலேயே, ஐந்து ஆடுகள் பலியாகின. 'இறந்த ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்; வெறிநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)