Advertisement

பூட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம்: உழவர் சந்தையில் மக்கள் தவிப்பு

  • எழுத்தின் அளவு:

ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், மூடப்பட்டுள்ள கழிவறையால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


ராசிபுரம், உழவர் சந்தை பஸ் ஸ்டாண்டுக்கு பின்புறம் உள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட உழவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதேபோல், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், வியாபாரிகள், வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக சந்தை வளாகத்தின் பின்புறம் கழிவறை அமைக்கப்பட்டது. அதிகாலை வரும் விவசாயிகள், பொதுமக்கள் அனைவருக்கும் இந்த கழிவறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே போதிய தண்ணீர் இல்லாததால், கழிவறை மூடப்பட்டது. இதுநாள் வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், வெளியே உள்ள கட்டண கழிப்பிடத்திற்கு தான் செல்ல வேண்டியுள்ளது. காய்கறிகளை கடைகளில் கொட்டிவிட்டு அவ்வளவு தூரம் செல்லவும் விவசாயிகள் தயங்குகின்றனர். முக்கியமாக பெண், வயதான விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். உழவர் சந்தை வளாகத்தில் உள்ள கழிவறையை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)