Advertisement

23 நாள் 30 லட்சம் பேர்: அத்திவரதரை தரிசனம்

  • எழுத்தின் அளவு:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், அத்திவரதரை, கடந்த 23 நாட்களில் 30 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.


காஞ்சி அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து எடுத்து வழிபடும் நிகழ்வு, ஜூலை, 1ம் தேதி துவங்கியது. இந்த வைபவத்திற்கு, வெளியூர், வெளி நாடுகளில் இருந்து, தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, அத்தி வரதரை தரிசிக்கின்றனர்.


பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்தனர். நேற்று(ஜூலை 23) முதல்வர் இ.பி.எஸ்., காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார். தொடர்ந்து, அங்கு செய்யப்பட்ட பக்தர்களுக்கு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், முதல்வர் இ.பி.எஸ்., சயன கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதர், ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள் பாலிப்பார்.ஆகம விதிப்படி, வசந்த மண்டபத்திலேயே அருள் பாலிப்பார் என்றார்.


இந்நிலையில், 24 வது நாளான இன்று (ஜூலை 24) மாம்பழ நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை கடந்த 23 நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (2)
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
24-ஜூலை-2019 13:03 Report Abuse
ரபேல் ராகுல் பாய் இது என்னப்பா டுமீல் போராளீஸ் டிராவிடர்களுக்கு வந்த சோதனை...
narayanan iyer - chennai,இந்தியா
24-ஜூலை-2019 10:54 Report Abuse
narayanan iyer ஒரு சிலர் அத்திவரதரை மீண்டும் உள்ளில் வைக்கவேண்டாம் என்கிறார்கள் .இப்படி நியமத்தை மாற்ற நாம் யார்? மேலும் ஒரு வைபவம் நாற்பது ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது அதை மக்கள் சிரத்தையாக பார்க்கிறார்கள் . அதை நித்திய தர்சனமாக மாற்றினால் அதன் சிறப்பு போய்விடும் . வானவில்லை தினமும் பார்க்கமுடிந்தால் அதன் சிறப்பு போய்விடும் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)