Advertisement

மஹாராஷ்டிரா 60.5 % : அரியானா 65 % ஓட்டுப்பதிவு

  • எழுத்தின் அளவு:

புதுடில்லி : மாலை 6 மணி நிலவரப்படி மஹாராஷ்டிராவில் 60.5 சதவீதமும் அரியானாவில் 65 சதவீதமும் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.


nsimg2394053nsimg


மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் இன்று (அக்., 21) சட்டசபை தேர்தல் நடந்தது. தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்களில் காலியாக உள்ள 51 சட்டசபை தொகுதிகள் மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
nsmimg725430nsmimg

ஆனால் சட்டசபை தேர்தல் நடக்கும் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் மிக மந்தமாகவே ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை 6 மணி நிலவரப்படி அரியானாவில் 65 சதவீதமும், மகாராஷ்டிராவில் 60.5 சதவீதமுமே ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.


இவ்விரு மாநிலங்களிலும் காங் - பா.ஜ., இடையே நேரடி போட்டி உள்ளதாலும், லோக்சபாவிற்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதாலும் முக்கியமானதாக இவ்விரு சட்டசபை தேர்தல்களும் பார்க்கப்படுகிறது. ஆனால் மோசமாக பதிவாகி வரும் ஓட்டுப்பதிவு அரசியல் கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக காங்.,க்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

nsmimg725431nsmimg


லோக்சபா தேர்தலில் பெற்ற தோல்வியில் இருந்து இன்னும் மீளாத காங்., கட்சி, இந்த இரு மாநில சட்டபை தேர்தல்களை தான் மலை போல் நம்பி உள்ளது. ஆளும் பா.ஜ., மீதும், பிரதமர் மோடி மீதும் மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக கூறி வரும் காங்.,ன் பிரசாரத்தை உண்மையாக்கும் மிகப் பெரிய ஆயுதமாகவே இந்த தேர்தலை காங்., பார்க்கிறது. ஆனால் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளை விட மிகக் குறைவாகவே சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கள் பதிவாகி வருவதால், இது யாருக்கு சாதகமாக இருக்கும்? என்ற குழப்பம் பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் வந்துள்ளது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (32)
Kannan - Chennai,இந்தியா
21-அக்-2019 20:45 Report Abuse
Kannan இங்கு ஒருவர் கமெண்ட் செய்திருப்பதை போல என்றால் தமிழ் நாட்டில் எப்பிடி தி மு கா வந்திருக்கும்?
RM -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-2019 20:42 Report Abuse
RM மஹாராஷ்ட்ரா,ஹரியானா அளப்பறிய வெற்றி காங்கிரஸ்க்கு அப்படினு செய்தி வந்தால், பி.ஜே.பி ,EVM பொய்காம்பினேஷன் புரூவ் ஆகும்.
Balaji - Khaithan,குவைத்
21-அக்-2019 19:20 Report Abuse
Balaji இந்த இரண்டு மாநிலத்தில் வாக்கு பதிவு சதவிகிதத்தால் கட்சிகள் மிகவும் குழப்பமடைவது இயல்புதான்.... இருந்தாலும் தோற்கும் கட்சிக்கு வசதியாக ஒரு காரணமாக இருக்கும்....... பதிவான வாக்கு சதவிகிதத்தில் 70 - 30 என யார் வாங்கினாலும் தோல்வியுறும் கட்சி இவர்களை இத்தனை சதவிகிதத்தினர் ஆதரிக்கவில்லை என்று ஆரம்பித்துவிடுவார்கள்.........
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-அக்-2019 18:44 Report Abuse
Natarajan Ramanathan EXIT POLL கருத்து கணிப்பின்படி இரண்டு மாநிலங்களிலுமே BJPக்குதான் வெற்றி.
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-அக்-2019 18:32 Report Abuse
தமிழர்நீதி ஒட்டு போடும் இயந்திரம் இருக்கும்வரை டெல்லியில் அந்த 1000 கோடிக்கு ஆபிச் வைத்துள்ள கட்சிக்குத்தான் பிசினஸ்
Halfmoon - Karaikudi,இந்தியா
21-அக்-2019 16:47 Report Abuse
Halfmoon ஓட்டுக்களை ஒட்டுமொத்தமா அள்ளியிறலாம்னு நினைச்சு.. இந்தியாவுக்கு ஆபத்து.. பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி.. ஐந்து பேர் மரணம் அப்படினெல்லாம் ஸீன் போட்டது வேஸ்டா போயிரும்போல இருக்கே?
Balaji - Khaithan,குவைத்
21-அக்-2019 19:28Report Abuse
Balajiதேர்தல் முடிவு வெளியாகும் தினத்தில் உங்களின் கருத்தை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கிறேன்..........
s.rajagopalan - chennai ,இந்தியா
21-அக்-2019 15:32 Report Abuse
s.rajagopalan மத சார்பற்ற கட்சிகள் ...மத சார்பு கட்சிகள் ....கேள்விப்பட்டிருக்கிறோம்... போலி மத கட்சிகள் ? 'புதுசா இருக்கு என்ன பதிவய்யா இது ?
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
21-அக்-2019 13:49 Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஒரு ஓட்டுக்கு, ரெண்டாயிரம் ரூபா தலா ரெண்டு டிராவிட் கட்சிகளும் கொடுத்துள்ளதால், சீக்கிரமா ஒட்டு போட்டுட்டு அந்த காச அப்படியே கொண்டு போய் பிராந்தி வாங்கி குடிப்பான்...பிராந்தி கம்பெனி நடத்துறதன் மூலமா டிராவிட் கட்சிகள் போட்ட காசுக்கு மேலயே திருப்பி லாபம் பார்த்துருவாங்க.. .இதுதான் காலகாலமா நடக்குதே...
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
21-அக்-2019 13:06 Report Abuse
NewIndia_DigitalIndia வோட்டு போட்டாலும் போடவில்லையென்றாலும் வழக்கம் போல 75 வாக்கு வந்துள்ளது என்று evm வாக்குகளையும் சேர்த்து முடிவு வரும் .
Balaji - Khaithan,குவைத்
21-அக்-2019 19:26Report Abuse
Balajiஐயோ ஐயோ...
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
21-அக்-2019 13:06 Report Abuse
சத்யமேவ ஜெயதே தமிழகத்தில் இடை தேர்தல் நேரமான இப்போது அந்த இரு தொகுதிகளிலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு தெருவில் குப்பை போல வீசப்படும் அளவிற்கு பணப்புழக்கம் நடந்து வருகிறது. இது பெரிய கட்சிகளின் ஊழலையும், அவர்கள் கொள்ளை அடித்து வைத்துள்ள சொத்துக்களையும் கூறுகிறது. அது போல மக்கள் தாராளமாக ஊழலை ஆதரிக்கிரார்கள், எலும்பு துண்டு மாதிரி தூக்கி போட்டால் எதையும் விட்டுக் கொடுக்க தயார் என்பது போலவும் தெரிகிறது. இப்படி மக்கள் இருந்தால் ஊழல் எப்படி ஒழியும் ? அரசியல்வாதிகள் எப்படி திருந்துவார்கள் ? கட்சிக்காக உழைப்பவர்கள் என்று கூறிக்கொள்ளும் கம்யுநிச்ட்களே கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய கோடிகள் பல என்று செய்திகள் கூறுகின்றன. இப்படி தமிழகமே ஊழலில் தலை கவிழ்ந்து நிற்கிறது. தேர்தல் வரும் போது அந்த விஷயம் வெட்ட வெளிச்சமாக நாட்டுக்கே தெரிகிறது.
மேலும் 20 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)