Advertisement

பக்தியை வியாபாரமாக்கும் இம்ரான்; மத்திய அமைச்சர் கண்டனம்

  • எழுத்தின் அளவு:

புதுடில்லி: கர்த்தாபுர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பது வெட்கக் கேடானது என மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் கடுமையாக விமர்சித்துள்ளார்.


nsimg2394056nsimg

சீக்கிய சமயத்தை தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவ் 550வது பிறந்தநாளை முன்னிட்டு சீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் ஷாகிப் குருதுவாரா, வரும் நவ., 09ம் தேதி திறக்கப்படும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.


இங்கு உலகம் முழுவதிலும் இருந்து சீக்கியர்கள் விசா இல்லாமல் யாத்திரை மேற்கொள்ளலாம் எனவும், இதனால் சீக்கியர்களின் மிகப்பெரிய வழிபாட்டு தலமாக கர்த்தார்பர் விளங்கும் எனவும் இம்ரான் தெரிவித்தார். மேலும், வளாகத்திற்கு வரும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.


nsmimg725433nsmimg

இதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், கர்த்தார்புர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிப்பதாக அறிவிப்பு வெளியானது அதிர்ச்சி அளிக்கிறது. ஏழை பக்தர்களால் எப்படி கட்டணம் செலுத்த முடியும். பக்தியை வியாபாரமாக்க முயற்சிக்கின்றனர். இந்த பணத்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் மேம்படும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


The $20 fee each charged by Pak for #KartarpurSahib darshan is atrocious. How will a poor devotee pay this amount? Pakistan has made a business out of faith. @ImranKhanPTI's statement that this fee will boost Pak's economy & result in earning foreign exchange is highly shameful. pic.twitter.com/a0sidEDIPZ— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) October 20, 2019

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (18)
சமத்துவம் - Chennai,இந்தியா
21-அக்-2019 20:40 Report Abuse
சமத்துவம் இது பாகிஸ்தானில் மட்டுமல்ல இந்தியாவில் கூட இருக்கும் அனைத்து மத வழிபட்டுதலங்களுக்கும் இது செல்ல வேண்டும். சிறப்பு நுழைவு கட்டணம், கட்டாய காணிக்கை கட்டணம், வாரிய வளர்ச்சிக்காசு என்று பல வகைகளிலில் இந்தியாவில் அணைத்து மத வழிபட்டு தலங்களும் பாரபட்சமின்றி மக்களின் பணப்பையை ஒரு வழிபார்த்து விடுகிறார்கள்.
21-அக்-2019 18:54 Report Abuse
ஆப்பு எது எதுல பணம் வருதோ அதெல்லாம் தான் செழித்து வளரும்.
Nathan - Hyderabad,இந்தியா
21-அக்-2019 18:39 Report Abuse
Nathan நுழையவே கட்டணம் இங்கும் பல கோவில்களில் கட்டப் பஞ்சாயத்தாக வசூலிக்கிறார்கள். மாங்காடு காமாட்சி கோவிலுக்கு ஆட்டோவில் சென்று முகனையில் இறங்கினாலும், ரசீது புத்தகத்தோடு ஓடிவந்து அடாவடியாக முப்பது ரூபாய் திட்டி கொண்டே பிடுங்கும் கயாவாளிகளை என்ன சொல்வது.
Balaji - Khaithan,குவைத்
21-அக்-2019 18:04 Report Abuse
Balaji சிலர் சிறப்பு நுழைவு கட்டணத்தையும் நுழையவே கட்டணம் என்பதில் உள்ள வித்தியாசத்தை மறந்து நமது கோவில்களிலும் கட்டணம் இருக்கிறது என்பது போல பேசுகிறார்கள்......நமது கோவில்களில் உள்ள சிறப்பு நுழைவும் தேவையற்றது தான்....... இருந்தாலும் பாகிஸ்தான் இப்படியாவது சற்று வருமானம் கிடைக்குமா என்று கேவலமாக சிந்திக்கிறது........
Guru - சென்னை,இந்தியா
21-அக்-2019 17:56 Report Abuse
Guru வழிபாட்டுதலங்களில் தரிசனத்துக்கு கட்டணம் விதிப்பது ஒன்றும் புதிது அல்லவே.
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-2019 17:50 Report Abuse
Yaro Oruvan என்னங்க இது.. எடுக்குறது பிச்சை.. அத வெளிநாட்டுக்கரன்சியில எடுக்குறானுவ.. காலக்கொடும
21-அக்-2019 14:59 Report Abuse
Sridhar Sambandham எங்க ஊர் கோவில் எல்லாம் வந்து பார்த்துக்குங்க 50 ரூபாய்க்கு குறைவாக தட்சனை வச்சா விபூதி கொடுக்கவே யோசிக்கிறார்கள்
21-அக்-2019 15:15Report Abuse
VIJAIAN Cunga ooru dubakoor?...
GMM - KA,இந்தியா
21-அக்-2019 13:37 Report Abuse
GMM பிரிவினைக்கு பின் நில உரிமை இந்திய பாராளுமன்றத்திற்கும் குடி உரிமை அங்கு வாழும் மக்களுக்கும் இருந்து இருக்க வேண்டும். ரயில், சாலை போக்குவரத்து போன்ற வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியா காரணம். பாக்கில் உள்ள சீக்கியர்கள் வழிபாடு ஸ்தலம் பஞ்சாப் மாநிலத்துடன் இணைந்து இருக்க வேண்டும். வருவாய் கோயில், மாநில அரசுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். வழிபாட்டுக்கு வரிவசூல் கூடாது. காங்கிரஸ் கட்சியின் பல நடவடிக்கை, கொள்கை நடுநிலையில் இல்லை. பல தாவா இருக்கும்.
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
21-அக்-2019 13:17 Report Abuse
Apposthalan samlin தாஜ் மஹால் நுழைவு கட்டணம் வெளிநாட்டு காரங்களுக்கு 18 அல்லது 19 $ காங் நேரத்தில் 5 $
HSR - MUMBAI,இந்தியா
21-அக்-2019 14:55Report Abuse
HSRஇடிச்சில்லாமா அந்த .......
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
21-அக்-2019 12:42 Report Abuse
தங்கை ராஜா ஹா... ஹ்ஹா.... இந்தம்மாளூக்கு தான் யார் கூட இருக்குரோம்னே தெரியலை போல. இம்ரான் வேற நாட்டுக்காரன் அப்படி இருக்கரதுல ஆச்சரியமில்லை. ஆனா இங்கே என்ன வாழுது. மதத்தையும் போலி பக்தியையும் மட்டுமே வச்சு வேஷம் கட்டுற கோஷ்டி கீழே தானே மந்திரியாக இருக்க முடியுது.
Arasu - Ballary,இந்தியா
21-அக்-2019 14:26Report Abuse
Arasuபரவாயில்லை, போலி மதசாரின்மை திராவிஷர்களின் அடிவருடிகள் இன்னும் அவர்களை நம்புகிறார்கள். மோடியை எதிர்த்து இந்த போலி மதச்சார்பின்மையைக்கு அளிக்கும் ஆதரவு வீண். அவர்கள் இதோ வந்துட்டேங்க எஜமான் என்று ...........
Rajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-2019 17:33Report Abuse
Rajanபள்ளி வாசல்ல பிச்சை எடுக்கறது முதல் பிரீ தான்...
Balaji - Khaithan,குவைத்
21-அக்-2019 18:08Report Abuse
Balajiமதசார்பின்மை என்று சொல்லி மதத்தையும் போலி கடவுள் எதிர்ப்பை வச்சு வேஷம் கட்டுற கோஷ்டி இதை சொல்வது தான் மிகப்பெரிய வேடிக்கை.........
மேலும் 3 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)