Advertisement

'டாப் 20' ஆதிக்க நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

  • எழுத்தின் அளவு:

புதுடில்லி : 2024 ம் ஆண்டு உலக அளவில் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 20 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது.


nsimg2394057nsimg

2024 ம் ஆண்டு உலக நாடுகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி சர்வதேச நாணய நிதியம் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக அளவில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும். பொருளாதாரமும் மந்தமாகவே இருக்கும். இந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் வளர்ச்சியில் 3 சதவீதம் சரிவு ஏற்படலாம்.


இது உலகின் 90 சதவீதம் பகுதியை பாதிக்கும். வளர்ச்சி விகித பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என்றாலும், சர்வதேச ஜிடிபி வளர்ச்சியின் சரிவு காரணமாக வளர்ச்சி மந்தமாகவே இருக்கும்.


nsmimg725435nsmimg


உலக வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், 2024 ல் வளர்ச்சி ஆதிக்க நாடுகள் வரிசையில் இந்தியாவை தொடர்ந்து 3 இடத்திலேயே இருக்கும். இந்தோனேசியா 4வது இடத்திலும், ஐரோப்பா 9வது இடத்திலும் இருக்கும். ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி ஜப்பான் 5 வது இடம்பிடிக்கும். ஜெர்மனி 7 வது இடத்திலும் இருக்கும்.


இவை தவிர துருக்கி, மெக்சிகோ, பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஸ்பெயின், போலந்து, கனடா ஆகிய நாடுகள் டாப் 20 நாடுகள் பட்டியலில் இடம் பிடிக்கும். அதே சமயம் வியட்நாம் டாப் 20 பட்டியலில் இருந்து வெளியேறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (11)
Murugaiyapillai Vedaraju - Chennai,இந்தியா
22-அக்-2019 01:13 Report Abuse
Murugaiyapillai Vedaraju கடந்த பதினான்கு வருடமாக, அமெரிக்க வளர்ச்சி விகிதம், இந்தியா வளர்ச்சி விகிதத்திவிட குறைவுதான். வளர்ச்சி விகிதம் வேறு மொத்த வளர்ச்சி வேறு. அமெரிக்காவின் மொத்த வளர்ச்சியை, நாம் அடுத்த இருப்பது ஆண்டுகளுக்கு எட்ட முடியாது.
21-அக்-2019 22:50 Report Abuse
kulandhai Kannan Liberals will be fuming at India getting second place in five years.
dandy - vienna,ஆஸ்திரியா
21-அக்-2019 20:23 Report Abuse
dandy சிரிப்பு வருது ..சிரிப்பு வருது .....இன்னும் திறந்த வெளி கழிப்பிடங்கள் ....ஓலை குடிசைகள் ..
Sampath Kumar - chennai,இந்தியா
21-அக்-2019 19:57 Report Abuse
Sampath Kumar இந்தியா மட்டும் என்னவாம் ?
Balaji - Khaithan,குவைத்
21-அக்-2019 17:10 Report Abuse
Balaji எதிர்காலத்தில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத நாடாக இருக்கும் என்பது ஒத்துக்கொள்ள கூடிய ஒன்று தான்....... தவிர இந்த பட்டியலில் துருக்கி, மெக்சிகோ, பாகிஸ்தான் இந்த நாடுகள் எப்படி 20 இடங்களுக்குள் வருகிறது என்று விளங்கவில்லை.........
Asagh busagh - Munich,ஜெர்மனி
21-அக்-2019 14:55 Report Abuse
Asagh busagh இந்தியா 130கோடி மக்கள் தொகைய நோக்கி போயிகிட்டே அதே நேரத்துல மந்த நிலையில் பொருளாதாரம் இருக்க சொல்ல எப்படி ஆதிக்கத்துல முன்னேறும்னு புரியல? கூட்டி கழித்து பார்த்தா கணக்கு சரியா இல்லையே. பெரிய அளவுல எண்ணெய் கிணறு எங்கையாவது இருக்கா?
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
21-அக்-2019 14:28 Report Abuse
மூல பத்திரம் துருக்கியின் வளர்ச்சியை விட வியட்நாமின் வளர்ச்சி அதகமங்க இருக்கும் என நம்புகிறேன்
dandy - vienna,ஆஸ்திரியா
21-அக்-2019 20:25Report Abuse
dandyதுருக்கியில் பிச்சைக்காரர்களை வீதிகளில் பார்க்கமுடியாது ...எல்லோரும் எதை யாவது செய்து பிழைக்கின்றார்கள் ..கிராமங்களில் கூட யூரோ நாணயத்தில் பொருள் வாங்கலாம் ..benz கார் இங்கு தயாரிக்கின்றார்கள்...
21-அக்-2019 13:56 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் துருக்கி, பாகிஸ்தான் எல்லாம் ஆதிக்க நாடுகள் பட்டியலில் இருந்தால், இந்த பட்டியலே வீண்.
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-அக்-2019 07:10Report Abuse
Nallavan Nallavanபொருளாதாரத்தில் முன்னேறிவரும் நாடுகள் என்று சொல்வதற்குப் பதிலாக அப்படிச் சொல்லிவிட்டார்களோ ? அப்படியே எடுத்துக்கொண்டாலும் அதில் (சீனாவின் காலனி நாடாக மாறி, அமெரிக்காவிடமும் பிச்சை எடுக்கும்) பாகிஸ்தான் ?...
Anand - chennai,இந்தியா
21-அக்-2019 12:24 Report Abuse
Anand துருக்கி அழிவை நோக்கி சென்றுக்கொண்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)