Advertisement

பசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக்

  • எழுத்தின் அளவு:

சென்னை: சென்னை அருகே பசுவின் வயிற்றில் 52 கிலோ அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றினர்.


nsimg2394062nsimg

இயற்கை வளங்களுக்கும், உயிர்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கேடு ஏற்படுத்துகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜன., 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இன்றுவரையில் முழுமையாக கட்டுப்படுத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, பிளாஸ்டிக் பயன்பாடு வழக்கம்போல் தான் இருக்கிறது.


இந்நிலையில், சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான பசு, சில நாட்களாக சாணம் மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிக்குள்ளானது. இதனால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளான பசு நோய்வாய்ப்பட்டது.


nsmimg725443nsmimg

இதனையடுத்து, பசுவை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு முனிரத்தினம் அழைத்து சென்றார். அங்கு பசுவை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றில் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், கழிவுகளை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த அறுவை சிகிச்சையில் பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது பசு, நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்து இந்த பசுவிற்கு மட்டுமல்ல, மற்ற உயிர்கள் மற்றும் இயற்கை வளங்களுக்கும் தான் என்பது பிளாஸ்டிக் பயன்படுத்தும் மக்களுக்கு என்று புரிய போகிறதோ.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (37)
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-அக்-2019 15:21 Report Abuse
skv srinivasankrishnaveni தான் தன்வீடுகிளீனாயிருக்கோணும் தெருவிலே பிளாஸ்டிக் பைலே கூப்பிக்கொட்டு=இ வீசுறங்கா பாவம் பால்காரனின் மாடுகள் அதையே துன்னு சாவுதுங்க பால்கறக்கும் எவனுக்கும் கருணை இல்லேன்னுதோணுது
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
22-அக்-2019 10:18 Report Abuse
Muthukrishnan,Ram இந்த சம்பவத்ததுக்கு முழு பொறுப்பு அந்த மாட்டுக்கு சொந்தக்காரன் தான் மாட்டை கட்டி தீனி போடா முடியாதவனுக்கு மாடு எண்ணாததுக்கு ரோட்டில் மேய விட்டால் கிடைத்ததெல்லாம் தின்னுவதோடு போக்குவரதத்துக்கு இடைஞசல் விபத்தும் தான் ஏற்படும்.
A P - chennai,இந்தியா
23-அக்-2019 12:24Report Abuse
A Pதிரு முத்துகிருஷ்ணன் சொல்வது மிகச்சரியே. இந்த ஆதங்கம் ஒவ்வொரு சென்னை வாசிகளுக்கும் உண்டு. கயவர்களை அதிகம் கொண்ட அரசியல் கட்சிகள். வேட்டியில் கறை போட்டவன் எவனும் சொல்வது, பாவப்பட்ட பொதுஜனங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாதது . நான் ஒவ்வொரு முறையும் நன்மங்கலம் ஏழுமலை சாலையில் ஜெ ஜெ பார்க்கைத் தாண்டும் போதும் படுகிற அவஸ்தை மாளாதது. சுமார் 50 மாடுகள் நாய்கள் தெருவில் பாதிவரை குப்பைகள் நிறைந்துள்ளன. குப்பைகளை ஊராட்சி ஊழியர்கள் தினமும் அள்ளினாலும் , போதவில்லை. மனசாட்சியே இல்லாத மாட்டுச் சொந்தக்காரங்கள் பாலை மட்டும் கறந்துக்கொண்டு மாட்டையும் கன்றையும் தெருவில் விட்டுவிடுகிறார்கள். நான் வேண்டிக்கொள்வதெல்லாம் அவர்கள் வீட்டு மக்களும், நம் வீட்டு மக்களும் வாகனங்களில் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டுமென்பதுதான். இது அந்த அறிவற்ற மாக்களுக்கு தெரியவேண்டும்....
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-அக்-2019 06:58 Report Abuse
Nallavan Nallavan """" ட்ரீட்மென்ட்டெல்லாம் பண்ண முடியாது ........வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போய்யா """" என்று அவர்கள் சொல்லாததே வியப்புக்குரியதுதான் ......
Balasubramanian - Bangalore,இந்தியா
21-அக்-2019 19:49 Report Abuse
Balasubramanian பாவம் பசு ஜீரணிக்க முடியாமல் எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாகியிருக்கும்? இது ஒரு பக்கம் இருக்க கோவா மாநிலத்தில் மாடுகள் வீதியில் எறியப்படும் சிக்கன், மீன் போன்ற அசைவ வகைகளை தின்கிறது என்கிறார்கள். வளர்ப்பு மாடுகளுக்கு அளிக்கப்படும் கலப்பட தீவனத்தால் பாலின் தரம் குறைகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படியே போனால், பால் அருந்தும் குழந்தைகள் நலன் என்னாவது? இருப்பவர்கள் அதிகமாக பணம் கொடுத்து ஆர்கானிக் பால் வாங்குவார்கள். மற்றவர்கள் கதி?
mohan - chennai,இந்தியா
21-அக்-2019 19:38 Report Abuse
mohan இந்த பிளாஸ்டிக் இல்லாத போது, என்ன செய்தோமோ, அதை இப்பொழுது செய்யலாமே..
21-அக்-2019 19:06 Report Abuse
அனீஷ் கால்நடைகள் வளர்ப்பவர்கள் வீட்டிலேயே வளர்க்கவும். வீட்டில் போதிய இடம் இல்லை யெனனில் ஏன் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள்? தெருக்களில் மேய விடுவாதால் போக்குவரத்துக்கு இடையூறும், இது போல் பிளாஸ்டிக் கழிவுகளை அதுகள் உண்ண நேர்கிறது.
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-அக்-2019 18:56 Report Abuse
Natarajan Ramanathan பிளாஸ்டிக்கை அறவே தவிர்ப்பது நல்லது. (நான் பத்து வருடங்களாக தவிர்க்கிறேன்) மேலும் மீதமான உணவுப்பொருட்களை குப்பையில் போடும்போது அந்த பையை முடிச்சு போடாமல் போடுங்கள். விலங்கு களால் முடிச்சை அவிழ்க்க முடியாததால் அப்படியே விழுங்குகின்றன....பாவம்.
kumar - hyderabad,இந்தியா
21-அக்-2019 18:20 Report Abuse
kumar This is the respect given to tasmac dravidian tamilnadu.
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-அக்-2019 17:08 Report Abuse
தமிழ்வேல் இதுவெல்லாம் பார்சல் சாப்பாட்டினால் வருவது. இவை, பாக்கி சாப்பாடு, குழம்புகளுடன் குப்பையில் வீசி எரிவதை உண்டு வளர்ந்து பால் கொடுக்கும் பசுக்கள். சாப்பாட்டுடன் பையையும் விழுங்கிவிடுகின்றன.
21-அக்-2019 16:52 Report Abuse
ருத்ரா வாயில்லா ஜீவன்களுக்கு புல் புண்ணாக்கு தரவில்லை என்றாலும் பரவாயில்லை வயிற்றிற்கு கெடுதி தரும் பிளாஸ்டிக்கை உபயோகிக்காதீர்கள் .
மேலும் 26 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)