Advertisement

மர்ம காய்ச்சலுக்கு 11 வயது சிறுமி பலி

  • எழுத்தின் அளவு:

குடியாத்தம்: குடியாத்தம் அருகே, மர்மக்காய்ச்சலுக்கு, 11 வயது சிறுமி பலியானார்.


வேலூர் மாவட்டத்தில், மர்மக்காய்ச்சல், வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. குடியாத்தம் அருகே, மேல்ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர், அறிவரசன், 49; இவரது மனைவி, சங்கீதா, 45; இருவரும் கூலித்தொழிலாளிகள். இவர்களின் மகள்கள் புவியரசி, 13; திவ்யா, 11. நெல்லூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் புவியரசி, எட்டாம் வகுப்பு படிக்கிறார். திவ்யா ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இருவருக்கும் கடந்த, 17ல் காய்ச்சல் ஏற்பட்டதால், குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் நேற்று முன்தினம், வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும் சேர்க்கப்பட்டனர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு திவ்யா இறந்தார். மர்மக்காய்ச்சல் பாதித்து திவ்யா இறந்ததாக, மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, மேல்ரங்கசமுத்திரத்தில் மக்களிடையே, டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது. குடியாத்தம் சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மர்மக்காய்ச்சலுக்கு, ஏற்கனவே மூன்று பேர் பலியான நிலையில், இது நான்காவது உயிரிழப்பாகும்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)