Advertisement

ஏலகிரிமலையில் நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிப்பு

  • எழுத்தின் அளவு:

திருப்பத்தூர்: ஏலகிரிமலையில், நாயக்கர் கால நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் அருகே, ஏலகிரிமலையில் உள்ள பாடகானூரில், பொதுமக்கள் துணி துவைக்க பயன்படுத்தி வந்த கல் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அந்த கல், கி.பி., 16ம் நூற்றாண்டை சேர்ந்த, நாயக்கர் காலத்து நடுகல் என கண்டறியப்பட்டது. கல்லில் உள்ள சிற்பத்தில், கையில் வில், அம்புடன் வீரன் உள்ளார். அவருக்கு அருகில், உடன் கட்டை ஏறிய அடையாளத்தில் பெண் ஒருவர் உள்ளார். இப்பகுதியில் நடந்த போரில் இறந்த வீரனுக்காக அவர் மனைவி உடன்கட்டை ஏறியது தெரிய வந்துள்ளது. இப்பகுதியில், இது போன்று ஏராளமான நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், இங்கு நீண்ட காலமாக போர் நடந்திருப்பது தெரிய வருகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையினர், இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டால், தமிழரின் பண்பாட்டு அடையாளர்களை கண்டுபிடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)