Advertisement

முருகன் சிறை அறையிலிருந்து மேலும் 2 சிம்கார்டு பறிமுதல்

  • எழுத்தின் அளவு:

வேலூர்: வேலூர் சிறையில், முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மேலும் இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 18ல் முருகன் அறைக்குள் இருந்து ஒரு மொபைல் போன் மற்றும் தலா ஒரு பேட்டரி, சார்ஜர், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டன. பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால், முருகனுக்கு அளிக்கப்பட்டு வந்த, நளினி- முருகன் சந்திப்பு மற்றும் உறவினர்கள் சந்திப்பு போன்ற சலுகைகள், மூன்று மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள, வேறு ஒரு அறைக்கு முருகன் நேற்று முன்தினம் மாற்றப்பட்டார். முன்பு அவர் தங்கியிருந்த அறையில், சிறை அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனை செய்தனர். அதில், மேலும் இரண்டு சிம் கார்டு, ஒரு சார்ஜரை பறிமுதல் செய்தனர். இது குறித்து, மீண்டும் பாகாயம் போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (1)
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-2019 14:56 Report Abuse
sekar ng இவர்கள் வெளியே வந்தால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)