Advertisement

வீடு கட்ட பணியாணை விரைந்து வழங்க ஏற்பாடு: வருவாய்த்துறையுடன் இணைந்து பணியாற்ற உத்தரவு

  • எழுத்தின் அளவு:

திருவண்ணாமலை: வருவாய்த்துறையுடன், பி.டி.ஓ.,க்கள் இணைந்து, பிரதமரின் வீடு கட்டும் திட்ட ஆணையை, பயனாளிகளுக்கு விரைந்து வழங்க, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.


'திருவண்ணாமலை மாவட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு, வீடு கட்ட ஆணை வழங்காமல் அலைக்கழித்த, பி.டி.ஓ., மற்றும் பஞ்., செயலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கடந்த மூன்று நாட்களில், 2,000 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள, 6,000 பயனாளிகளுக்கு, வீடு கட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மற்றும் அதிலுள்ள இடர்பாடுகள் குறித்து, கலெக்டர் கந்தசாமி, நேற்று பி.டி.ஓ.,க்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து, இன்னும் ஓரிரு நாட்களில் அனைவருக்கும் ஆணை வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, தகுதியுள்ள நபர்களுக்கு, பட்டா வழங்காமல் இருந்தால், அதை உடனடியாக வழங்க, வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். இதனால், பி.டி.ஓ.,க்கள் மற்றும் பஞ்., செயலாளர்கள் கிராமந்?தோறும் சென்று களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)