Advertisement

பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் தின விழா

  • எழுத்தின் அளவு:

சென்னை பூந்தமல்லி அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கோல்டன் ஓப்புலன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 815 க்கும் மேற்ப்பட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்குடும்பங்களில் 200க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் உள்ளனர். இக்குடியிருப்பில் 14.11.2019 அன்று குழந்தைகள் தின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் பொருட்டு குழந்தைகளுக்கான ஆடல், பாடல், ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, கையெழுத்து போட்டிகள் நடைபற்றன. இவ்விழாவானது வளரும் தலைமுறையினரின் தனித்திறமைகளையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் விதமாகவும் செல்போன் யுகத்தில் கூட்டு முயற்சி மற்றும் ஒற்றுமையின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் இவ்விழாஅமைந்திருந்தது.


இவ்விழாவிற்க்கு டாக்டர்.சுதிர், எலும்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், இராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகம், சென்னை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புறை வழங்கினார்.


இவ்விழாவினை கோல்டன் ஓப்புலன்ஸ் மகளிர் சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஒருங்கிணைத்திருந்தனர்.


Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)