Advertisement

ராஜபக்சே வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பலன் கிட்டுமா ?

  • எழுத்தின் அளவு:

புதுடில்லி : இலங்கையில் புதிய அதிபர் தேர்வு செய்வதற்கான தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (நவ.,17) எண்ணப்பட்டன.


nsimg2413590nsimg


இலங்கை தேர்தல் நிலவரத்தை ஆரம்பம் முதலே இந்தியா மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறது. இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சீனா, இந்திய பெருங்கடல் பகுதியில் சாலை அமைப்பதை தீவிரப்படுத்தி வருகிறது. 2017 ம் ஆண்ட இலங்கையின் கம்பன்டோட்டா துறைமுகத்தை ஆக்கிரமித்த சீனா, இந்திய பெருங்கடல் பகுதியில் தனது கடற்படையை விரிவுபடுத்தி வருகிறது. ஆனால் இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு மிக அருகே சீனா, தனது பலத்தை விரிபடுத்தி வருவதை இந்தியா விரும்பவில்லை. இந்திய கடல் பகுதியில் சீன கப்பல்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு வருகிறது.


nsmimg731379nsmimg


அமெரிக்கா மற்றும் பிரான்சு நாடுகளும் கூட, இந்திய கடல் பகுதியில் சீனா தனது கடற்படை கப்பல்களை நிறுத்தி வருவதை விரும்பவில்லை. இலங்கையின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனா பில்லியன் கணக்கில் டாலர்களை நிதியாக வழங்கி வருகிறது. இதற்கு இலங்கையின் முந்தைய அதிபர் மகிந்திர ராஜபக்சே ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவின் உறவினரான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு சீனா நெருக்கடி கொடுக்க வழிவகுக்கும்.


nsmimg731380nsmimg


அத்துடன் இலங்கை போர் குற்றங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்கு பெரும் உதவியாக இருக்காது என கருதுகிறது. இலங்கை தேர்தலில் வேட்பாளர்கள் பலருக்கு சீனா சட்ட விரோதமாக பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவிற்கு எதிராக கடல்வழி ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்களில் இலங்கையும், சீனாவும் ஈடுபட எளிதாகி விடும்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (31)
Girija - Chennai,இந்தியா
17-நவ-2019 22:30 Report Abuse
Girija தமிழா தமிழா காஷ்மீரும் கன்யாகுமரியும் இனிமேல் ஒன்றேதான்.
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-நவ-2019 20:49 Report Abuse
Sanny ராஜபக்சேயால் பலன் இருக்கா என்பதை விட, இவர் முன்பு இலங்கையில் இருந்த பிரதமர்கள், ஜனாதிபதிகள் போல அல்ல இவர் கோட்டாபய, இவர் யாருக்கு அடங்காதவர், அண்மையில் இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலாவை சந்தித்தபோது, எதிர்க்கட்சிகள், தமிழ்கட்சிகள், இந்திய உளவுத்துறை சொன்ன அவரின் தவறான போக்குகளை மைத்திரிபால சிறிசேனைக்கு தலையில் குட்டாத குறையாக அவரை நம்ம மோடிஜி அவர்கள் கண்டிப்புடன், கோபத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம், அவர் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாராம், ஆனால் இவர் கோட்டாபய அப்படி பொறுமையாக எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கமாட்டார், ஏதாவது ஏடாகூடமாக சொல்வார் , அல்லது எதிர் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்,
Rajanram - London,யுனைடெட் கிங்டம்
17-நவ-2019 19:58 Report Abuse
Rajanram It is unnecessary to have fear about new President of Lanka. India needs money to build India. India can not give same amount of money to Lanka as China give. Lanka will not bypass India. India and China are moving closer to each other in many fronts. China is neighbour of India. Neighbours should live together peacefully for their own sake in order achieve prosperity. Only NGO funded Tamil fronts and their leaders will be happy about Gotabaya Rajapakse's victory because they can get more money to keep tense situation between Tamils and Sinhalese, and India (Tamil Nadu) and Lanka. NGO stops funding these elements when non Buddhists are in power in Lanka. Tamils and Sinhalese in Lanka celebrate same new year in April. Sinhalese worships our "ARASA MARAM".which we worship. There is no issue between the Tamils and Sinhalese. Actually Tamil areas, Tamil business, state officials in Tamil areas, and Tamil worshipping centres, are being surrounded and occupied by foreign religious communities. In order to hide these type occupation, Tamil and Sinhalese tension is being artificially d by NGOs. Lets common sense prevail everywhere.
Girija - Chennai,இந்தியா
17-நவ-2019 17:40 Report Abuse
Girija ராஜபக்க்ஷே சீனா மிகப்பெரிய ஆபத்து, இதில் லலிதா ஜுவெல்லர்ஸ் முருகன் போல் சீனா முருகன்கள் அளவெடுத்துக்கொண்டு சென்றிருக்கின்றனர்.
B Srinivasan - trichy,இந்தியா
17-நவ-2019 16:44 Report Abuse
B Srinivasan அங்கே உள்ள ஒரு சாரார் இதற்காக மிகவும் வருந்துவர். நம் நாட்டிற்கு இந்த ஸ்ரீலங்கா ஒரு கொசு. ஆனால் அந்த ஒரு சாரார் என்று உள்ளவர்களை காக்கும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது.
Tamil - chennai,இந்தியா
17-நவ-2019 16:12 Report Abuse
Tamil விடுதலை புலிகள் இருந்தவரை இந்தியாவிற்கு இலங்கை பயந்தது காங்கிரஸ் தவறான பாதை ஒரு தலைவரின் உயிர் பறிபோனது இல்லாமல் இலங்கையை சீனாவிடம் விட்டுவிட்டது.
Murthy - Bangalore,இந்தியா
17-நவ-2019 16:00 Report Abuse
Murthy இந்தியா இனப்படுகொலைக்கு துணைபோனதன் பலனை இனி அனுபவிக்கும்..... தான் தலையில் மண்ணை போட்டுக்கிட்டது....
17-நவ-2019 15:49 Report Abuse
 ஆரூர் ரங் 2 இலங்கைக கட்சிகளுமே தமிழர் மற்றும் இந்திய வெறுப்பரசியலையே போட்டிபோட்டு நடத்தி சிங்கள இனத்தை தவறாக வழிநடத்தி மிருகத்தனத்தில் வாழ்கின்றனர் .கோத்தபய ராஜபக்சே வெற்றியால் மகிழப்போவது நம்மிடம் கொள்ளையடித்த 28000 கோடி பணத்தை இலங்கையில் முதலீடு செய்துள்ள தீயமூகதான் .
17-நவ-2019 15:34 Report Abuse
Syed Ghouse Basha நிச்சயம் இல்லை அவன் நமது வாழ்த்தை முதலீடாக கொண்டு சீனா காரனிடம் பலன் பெறுவதோடு இந்தியாவை சீனா காரனுக்கு காட்டி கொடுக்கவும் இந்திய பெருங்கடலில் சீன ராணுவத்தை நிலைநிறுத்தவுமே பயன் படுவான்!
dandy - vienna,ஆஸ்திரியா
17-நவ-2019 15:31 Report Abuse
dandy அன்று கண் அசைவில் டெல்லி அரசை ஆட்டிய கட்டுமரத்திற்கும் ..இலங்கை சீன மயம் ஆக்கியத்தில் பங்கு உண்டு
மேலும் 21 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)