Advertisement

மாணவிகளை கேலி செய்தவரை துவைத்தெடுத்த பெண் போலீஸ்

  • எழுத்தின் அளவு:

கான்பூர்: பள்ளி செல்லும் மாணவிகளை கேலி செய்த நபரை பெண் கான்ஸ்டபிள் ஒருவர், பொது இடத்தில் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


nsimg2431523nsimg


உ.பி.,யில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கான்பூரின் பித்துர் பகுதியில், பள்ளிக்கு செல்லும் மாணவிகளை, வழியில் நின்று கேலி செய்து, பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் அப்பகுதி இளைஞர் ஒருவர். இதனைக் கண்ட பெண் கான்ஸ்டபிள் ஒருவர், அந்த நபரை பொது இடத்தில், தனது ஷூவால் கடுமையாக தாக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து அந்த பெண் கான்ஸ்டபிளை பலரும் பாராட்டி வருகின்றனர்.


nsmimg737103nsmimg

பித்தூர் பகுதி போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் சன்சல் சவ்ரசியா தான் அந்த இளைஞரை துவைத்து எடுத்துள்ளார். இவர் ஆன்டி-ரோமியோ படையை சேர்ந்தவர். பள்ளி மாணவிகளுக்கு தெந்தரவு அளிக்கப்படுவது தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கான்பூர் எஸ்.பி., அனில் குமார் தெரிவித்துள்ளார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (27)
11-டிச-2019 21:17 Report Abuse
ஆப்பு எங்கே மனித உரிமை ஆணையம். எப்புடி ஒரு பொறுக்கியை போலீஸ் அடிக்கலாம்? அதுவும் பெண்போலீஸ். உடனடி விசாதிச்சு அவனுக்கு நீதி, நியாயம், ஊக்கத்தொகை எல்லாம் வழங்க ஏற்பாடு செய்யுங்க. சுப்ரீம் கோர்ட்டையும் துணைக்கு அழையுங்க.
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
11-டிச-2019 20:22 Report Abuse
THINAKAREN KARAMANI தவறுசெய்தவனை தண்டிக்கணும். இதுபோன்று போலீஸ் உடனுக்குடன் ''கொடுக்கவேண்டியதைக் கொடுத்தால்' வேலைமுடிந்தது. நாம் தப்புசெய்தால் போலீஸ் இதுபோன்று நமக்கும் தரவேண்டியதை தந்தே தீருவார்கள் என்று உணர்வான். கண்டிப்பாக தவறுகள் குறையும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rajas - chennai,இந்தியா
11-டிச-2019 17:15 Report Abuse
Rajas 30 வருடங்களுக்கு முன் இப்படி தான் இருந்தது. குற்றம் செய்கிறவனை ரோட்டில் உதைக்கிறபோது அதை பார்ப்பவர்கள் தவறு செய்யவே பயப்படுவார்கள். நன்றாக இருந்த போலீஸ் / ஆட்சியில் (தமிழ்நாடு) மெதுவாக அரசியல்வாதிகள் ஊடுருவினர்கள். தங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு confired IPS /IAS என்று கொடுத்து நாசம் செய்து விட்டார்கள். ஜெயலலிதாவாவால் பரவலாக அதிகமாகி கருணாநிதி ஆட்சியில் ருசி கண்டு இப்போது ஒரு சட்டம் போல வழக்கமாகி விட்டது.
A P - chennai,இந்தியா
12-டிச-2019 17:02Report Abuse
A Pபோலிஸைக் குட்டிச்சுவராக்கியது திமுக , அதிமுக அரசியல் . போலீசிலும், கட்சிகளிலும் ஒரு சிலரே நல்லவர்கள். போலீசுக்கு திருடன் பயந்த காலம் பொற்காலம். அப்போது போலீசார் தவறு இழைத்து பார்த்ததில்லை. கேள்வி கேட்கவேண்டிய அதிகாரிகளும், அமைச்சர்களும் திருடும் பொது என்னத்தைத்தான் செய்வது. மானம் ரோஷம் இல்லாதவர்கள்....
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13-டிச-2019 03:41Report Abuse
 nicolethomsonதமிழக போலீசை இவ்வளவு கீழ்த்தர நிலைக்கு கொண்டு சென்றது காலம் சென்ற எட்டப்பனின் கைவண்ணம்ம் , மீண்டும் அவனின் வாரிசு வந்தால் என்னாகும் என்று யோசிக்கவே நெஞ்சம் பதறுது...
11-டிச-2019 16:30 Report Abuse
ஸாயிப்ரியா பெற்றோர் சொல்லி திருந்தாதவர்கள் இப்படித்தான் திருந்தணும் இல்ல வருந்தணும். இது தாண்டா போலீஸ். Great
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-2019 15:55 Report Abuse
Tamilan இதேபோல் நாடு முழுவதும் காலம் காலமாக நடப்பதுதான் . இப்படி சட்டத்தில் தாங்கள் கையில் எடுத்துக்கொள்வதை நீதிமன்றங்களும் , மனித உரிமை கமிஷன்களும் தங்களின் சுய மற்றும் இனவாத லாபங்களுக்காக கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன . ஏதாவது ஒன்றிரண்டை வைத்து காலம் கடத்தி, மற்றவற்றை தங்களின் இயலாமையால் , கண்டும் காணாமலும் விட்டுவிடுகின்றன .
11-டிச-2019 15:34 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வேலை வெட்டி இல்லையென்றால் கைகள் உடைத்து ரோட்டில் பிச்சை எடுக்க விடலாம். அவரை பார்த்து இனி ரோட்டு ஓரத்தில் நின்று பெண்களை கேலிசெய்பவர்கள் திருந்தட்டும்
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-2019 14:41 Report Abuse
Tamilan கேலி செய்தவரையே இவர் இப்படி செய்தால் , இனி பெரிய தவறுகளுக்கு இவர் என்னவெல்லாம் செய்வார்?. தெலுங்கானா போலீசு பிச்சையெடுக்கவேண்டுமா ?.
KavikumarRam - Chennai,இந்தியா
11-டிச-2019 14:16 Report Abuse
KavikumarRam இது மனித உரிமை மீறல் இல்லையா? இந்த லேடி கான்ஸ்டபிள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், எப்பூடி நாங்களும் இந்த செக்யூலர் மற்றும் மனித உரிமை கேள்வி கேப்போம்ல.
ஜெயந்தன் - Chennai,இந்தியா
11-டிச-2019 14:10 Report Abuse
ஜெயந்தன் பாராட்டுக்கள்....இவர்களைப்போன்றவர்களை..இப்படித்தான் முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும்.......
anbu - London,யுனைடெட் கிங்டம்
11-டிச-2019 13:54 Report Abuse
anbu முன்னர் எல்லாம் பொது வெளியில் பொதுமக்கள் முன்னிலையில் பொது மக்களே தண்டனை வழங்கும் நடை முறை இருந்தது. அதனால் இத்தகைய குற்ற செயல்கள் மிக மிக குறைவு. இப்போதோ போலி மனிதாபிமான அரசியல் வாதிகளும் ,மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் இவர்களை பாது காத்து வருவதால் பெண்களுக்கு எதிராக குற்ற செயல்கள் பெருகி வருகின்றன.
மேலும் 15 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)