Advertisement

உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

  • எழுத்தின் அளவு:

புதுடில்லி : தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்து, 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.


nsimg2431525nsimg

உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறி சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மனு இன்று (டிச.,11) விசாரிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என திமுக, காங், மதிமுக, இடதுசாரி கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று விசாரிப்பட்டது. இந்த விவகாரத்தில் காங்., சார்பில் வழக்கறிஞராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகினார்.


nsmimg737107nsmimg


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோர்ட் உத்தரவு காரணமாக ஏற்கனவே அறிவித்த தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு, சமீபத்தில் புதிய அறிவிப்பாணையை தமிழக தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணை அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பினரும் தலைமை நீதிபதி பாப்டே முன்பு தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.


வாதங்கள்:




தமிழக அரசு: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை திமுக விரும்பவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் இதுபோன்ற மனுக்களை திமுக தாக்கல் செய்துள்ளது.


திமுக: ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டை பயன்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் தேர்தலை நடத்த கூடாது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி தேர்தலை நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளது. தங்கள் தரப்பில் ப.சிதம்பரம் வாதங்களை வைக்க மேலும் 5 நிமிடங்கள் வேண்டும்.


தமிழக அரசு: ஒரு நிமிடம் கூட அளிக்காதீர்கள். தேர்தலை நிறுத்த இன்னும் எவ்வளவு நேரம் பேசுவார்கள்.


திமுக: மற்ற வழக்குகளில் நீங்களும் இப்படி தான் செய்தீர்கள்.


தமிழக அரசு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை அரைகுறையாக படித்துவிட்டு பேசுகிறார்கள். திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் பொய்.


தலைமை நீதிபதி பாப்டே: 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தினால் திமுக.,விற்கு சம்மதமா?


திமுக: ஆரம்பத்தில் இருந்தே இதே கருத்தை தான் வலியுறுத்தி வருகிறோம்.


உத்தரவு




வாதங்களின் அடிப்படையில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து, தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி தேர்தலை நடத்தலாம் எனவும் உத்தரவிட்டது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (15)
MIRROR - Thamizhagam,இந்தியா
11-டிச-2019 20:24 Report Abuse
MIRROR திமுகவின் கோரிக்கை நியாயமானது என்பதால் தானே கோர்ட்டு அதை ஏற்று அதன்படி 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்த்ல் நடத்த உத்திரவிட்டுள்ளது
kumzi - trichy,இந்தியா
11-டிச-2019 20:10 Report Abuse
kumzi பொணத்தை வைத்து அரசியல் செய்யும் சீனிசக்கர சித்தப்புவுக்கு இன்னும் பொணம் கெடைக்கலயோ
karutthu - nainital,இந்தியா
11-டிச-2019 18:49 Report Abuse
karutthu தங்கள் தரப்பில் ப.சிதம்பரம் வாதங்களை வைக்க மேலும் 5 நிமிடங்கள் வேண்டும். ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் (Accused) ஜாமீனில் வெளிவந்தவர் கோர்ட்டில் வாதாடலாமா ? சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
chenar - paris,பிரான்ஸ்
11-டிச-2019 16:53 Report Abuse
chenar இந்த தேர்தலை இதுவரை தள்ளி போட்டதே தமிழக அரசுதான் நீதிமன்றத்தின் வற்புறுத்தலாலேயே இந்த தேர்தலே நடக்கிறது
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-டிச-2019 16:27 Report Abuse
S.Baliah Seer நீதிமன்ற தீர்ப்புக்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதை பல நேரங்களில் பார்த்திருக்கிறோம்.இதோ ஓர் உதாரணம்: உச்ச நீதி மன்றம் ஓய்வூதியதாரர்களை வேறுபடுத்தக்கூடாது என்று பலமுறை தீர்ப்பளித்தும் cat ,உயர்நீதிமன்றம் போன்றவை உச்சநீதிமன்ற தீர்ப்புக்களை குப்பையில் வீசுகின்றன.BSNL ஓய்வூதியர் சங்கம் தங்கள் ஜூனியர் ஓய்வூதியர்களுக்கு கொடுக்கும் அதே சலுகைகளை சீனியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று எர்ணாகுளம் கேட்-இல் வழக்கு தொடுத்தது.அதை எர்ணாகுளம் cat டிஸ்மிஸ் செய்தது.சொன்ன காரணம் என்ன தெரியுமா? மத்திய அரசு சலுகைகள் BSNL -க்கு பொருந்தாது ..அப்படியானால் மத்திய அரசு சலுகைகள் BSNL - ஜூனியர் ஓய்வூதியர்களுக்கு மட்டும் எப்படிபொருந்தும். .நம் நீதிபதிகள் வழக்கு என்ன என்று தெரியாமல் தீர்ப்புக்கூறி வருகிறார்கள்.
Rajas - chennai,இந்தியா
11-டிச-2019 20:14Report Abuse
Rajasஏன் என்று அரசின் Notification மற்றும் உங்களுடைய பணி ஆணையை பார்க்க வேண்டும்....
chenar - paris,பிரான்ஸ்
11-டிச-2019 15:31 Report Abuse
chenar இதில் திமுகவிற்கு தானே வெற்றி அவர்கள் கேட்ட ஆண்டின் படிதானே தேர்தல் நடை பெறுகிறது அதனால்தானே தேர்தல் நடத்த கூடாது என்று சொன்னார்கள் ?
karutthu - nainital,இந்தியா
11-டிச-2019 18:51Report Abuse
karutthuஅவர்கள் எண்ணம் அதுவல்ல எப்படியாவது தேர்தலை நிறுத்தவேண்டும் அல்லது தி மு க ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தணும் என்ற எண்ணம் போல தெரிகிறது ....
Nachimuthu - mettur,இந்தியா
11-டிச-2019 14:55 Report Abuse
Nachimuthu திமுகவின் கனவு தவிடு பொடியாகிவிட்டது
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
11-டிச-2019 13:51 Report Abuse
வல்வில் ஓரி செவுள்ளயே குடுத்து அனுப்பிட்டாய்ங்க...ஹா ஹா...இடப்பாடி ன்னா ஒரு மருவாதி இருக்கணும் ...இனிமே இருக்கும்...ஹா ஹா.
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-2019 17:57Report Abuse
தமிழ்வேல் டீம்கா கேட்டது 2011 பட்டியல் படி தேர்தல் நடத்தனும்னு, இல்லாட்டி தள்ளிப்போடனும். OK வா ? இதுக்கு கோர்ட் என்ன சொல்லி இருக்கு ?...
Rajas - chennai,இந்தியா
11-டிச-2019 20:12Report Abuse
Rajasதமிழ் வேல். நீங்கள் சொன்னது தான் சரி....
ezhumalaiyaan - Chennai,இந்தியா
11-டிச-2019 13:47 Report Abuse
ezhumalaiyaan தி,முக்,காவிற்கு பலத்த சவுக்கடி. இரட்டை வேடம் கலைந்தது.
suresh kumar - Salmiyah,குவைத்
11-டிச-2019 13:19 Report Abuse
suresh kumar //இந்த விவகாரத்தில் காங்., சார்பில் வழக்கறிஞராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகி உள்ளார்.// உடல் நலம் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளாரா?
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-2019 17:58Report Abuse
தமிழ்வேல் இப்போ தினைக்கும் கருப்புட்டி காப்பி சாப்புடுவாரு....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)