Advertisement

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா; ஒரே நேரம் ரெண்டு திருமணம்

  • எழுத்தின் அளவு:

போபால்: மத்திய பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில், கடந்த நவ.,26ம் தேதி, குடாவலி கிராமத்தை சேர்ந்த திலீப் என்ற தீபு பரிஹார் என்பவர், தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவர் என இருவரையும் ஒரே நேரத்தில் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. திலீப் (35) என்பவர், வினிதா (28) என்பவரை கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண்கள் உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்.


nsmimg737109nsmimg

இந்நிலையில், வினிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் இருவரும் சேர்ந்து விசித்திரமான முடிவு எடுத்தனர். அதன்படி, நவ.,26ம் தேதி, வினிதாவிற்கு மீண்டும் தாலி கட்டிய திலீப், வினிதாவின் உறவினரான ரச்னா (22) என்ற பெண்ணுக்கும் தாலி கட்டினார்.


இது குறித்து திலீப் கூறுகையில், என் மனைவி வினிதாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் எங்களின் 3 குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதனால், குழந்தைகளை கவனிப்பதற்காக வினிதாவின் ஒப்புதலுடன் ரச்னாவை திருமணம் செய்தேன், என்றார். இது ஹிந்து திருமண சட்டத்திற்கு எதிரானதாக இருந்தாலும், இதுவரையில் எந்தவிதமான புகாரும் வரவில்லை என அம்மாவட்ட எஸ்.பி., ருடால்ப் அல்வரெஸ் கூறினார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (15)
Endrum Indian - Kolkata,இந்தியா
11-டிச-2019 18:06 Report Abuse
Endrum Indian ஹிந்து திருமண சட்டத்திற்கு எதிரானதாக? நம்ம ஜல்லடை ஓட்டை சட்டம் என்ன சொல்கின்றது "பாதிக்கப்பட்டவர் புகார் கொடுக்கும் வரை நடவடிக்கை இல்லையாம்"?????விளங்கிடும் இந்த மாதிரி சட்டம் இருக்கும் வரை???
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-டிச-2019 17:01 Report Abuse
ஆரூர் ரங் இந்த திலீப்புக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருப்பதால் இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-டிச-2019 17:01 Report Abuse
ஆரூர் ரங் .பிரபலஎழுத்தாளர் பாலகுமார்கூட இரு மனைவியருடனும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தார் .அதனை மறைக்கவுமில்லை .
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-டிச-2019 17:01 Report Abuse
ஆரூர் ரங் முதல்மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும்தான் பலதாரமணம் பற்றி புகார் தரமுடியும் .அவர்களே இரண்டாம் மூன்றாம் நான்காம் திருமணங்களை ஏற்றுக்கொண்டால் போலீஸ் ஒன்றும் செய்யமுடியாது .இந்து பலதார திருமணச்சட்டம் இதுபோன்ற பழங்குடியினருக்குப் பொருந்தாது பலதாரமணம் அந்த இனத்தில் பாரம்பரியமாக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் சட்டப்படியே ஒன்றுக்குமேல் மணந்துகொள்ளலாம் (இங்க என்னடான்னா ஒண்ணே ஒண்ண வெச்சுக்கிட்டே சமாளிக்கமுடியலை)
V.B.RAM - bangalore,இந்தியா
11-டிச-2019 15:15 Report Abuse
V.B.RAM வினிதாவிற்கு மீண்டும் தாலி கட்டிய திலீப், வினிதாவின் உறவினரான ரச்னா (22) என்ற பெண்ணுக்கும் தாலி கட்டினார்.??? இரண்டு மனைவி என்று ஒப்புக்கொள்கிறார். எவ்வளவோ பரவாயில்லை. கட்டுமரம் போல மனைவி துணைவி என்று குழப்பாமல்
KavikumarRam - Chennai,இந்தியா
11-டிச-2019 16:01Report Abuse
KavikumarRamஇணைவியை விட்டு விட்டீர்கள்....
J sundarrajan - Coimbatore,இந்தியா
11-டிச-2019 13:53 Report Abuse
J sundarrajan குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு குழந்தையைத் தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா?
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-டிச-2019 13:27 Report Abuse
Pasupathi Subbian இப்போதைய தேவை தனது குழந்தைகளுக்கு ஒரு பாதுகாவலர். நாளைக்கு இந்த பெண்ணுக்கும் குழந்தைகளை கொடுத்து, அந்த குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் நல்லது.
a natanasabapathy - vadalur,இந்தியா
11-டிச-2019 12:47 Report Abuse
a natanasabapathy Nammoor arasiyalvaathikalum cinema koothaadikal um seyyaathathai yaa ivar seythu vittaar
சீனி - Bangalore,இந்தியா
11-டிச-2019 12:14 Report Abuse
சீனி ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா, இல்லை ரெண்டு மாங்காயும் நசுங்குமான்னு வரலாறுதான் சொல்லும்.
மணி - புதுகை,இந்தியா
11-டிச-2019 12:02 Report Abuse
மணி ம்ம்ம்..
மேலும் 4 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)