Advertisement

விளக்கு ஏற்றும் போது தீ விபத்து; தந்தை பலி; மகள் சீரியஸ்

  • எழுத்தின் அளவு:


பெரம்பலுார்: அரியலுார் அருகே, இளம்பெண் ஒருவர் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, அகல் விளக்கு ஏற்றும் போது தீ விபத்து ஏற்பட்டதில், அவரது தந்தை உயிரிழந்தார். விளக்கேற்றிய பெண் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



அரியலுார் மாவட்டம், கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்,55; இவர், உடையார்பாளையம்-கழுமங்கலம் சாலையில் பெட்டிக்கடை மற்றும் ஹலோபிளாக் கற்கள் வியாபாரம் செய்து வந்தார். இவரது இளைய மகள் பவானி,18, தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் டிச.,10 இரவு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு பவானி கடையில் அகல்விளக்கு ஏற்றும் போது கை தவறி விளக்கு விழுந்து பவானி மீது தீப்பற்றியது. கடையிலும் தீப்பொறிபட்டது. அவரை காப்பாற்ற முயன்ற செல்வம் மீதும் தீப்பற்றியது. கடையும் எரிந்து நாசம் ஆனது. இது குறித்து, தகவலறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த செல்வம் அவரது மகள் பவானியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் செல்வம் உயிரிழந்தார். பவானி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)