Advertisement

இயற்கை முறை சாகுபடி அரசு வழங்கும் மானியம்

  • எழுத்தின் அளவு:

திருமங்கலம், திருமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தில் இயற்கை முறையிலான காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.முப்பது நாட்கள் முதல் ஆறு மாதங்கள் பயிராக சாகுபடி செய்யும் கீரை வகைகள் மற்றும்
காய்கறி வகைகளுக்கு ரசாயன பூச்சிகொல்லி, உரங்கள் பயன்படுத்தாமல் நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் விதம் கீரை விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 2500, தக்காளி, வெண்டை மற்றும் கத்தரி விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 3750 மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 எக்டேருக்கு வழங்கப்படும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் நிலங்களை பதிவு செய்து அங்கக(இயற்கை முறையில் பயிரிடப்பட்டது)சான்று பெறலாம். தனி நபராகவோ, குழுக்களாகவோ பதிவு செய்யலாம். சான்று பெற வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 500 மானியம் வழங்கப்படுகிறது என உதவி இயக்குனர் பிரபா தெரிவித்துள்ளார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)