Advertisement

ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தமா?

  • எழுத்தின் அளவு:

புதுடில்லி : 'ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்துவது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் நேற்று, மத்திய நிதித் துறை இணை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:ரிசர்வ் வங்கி அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில், எந்தெந்த ரூபாய் நோட்டுகளை, எவ்வளவு அச்சிடுவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும்.கடந்த, இரண்டு நிதி ஆண்டுகளில், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தொடர்பாக எந்த அறிவுறுத்தலும் பெறப்படவில்லை. ஆனாலும், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

nsmimg807948nsmimg


கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டதாக, ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்தது. தற்போது, படிப்படியாக அந்த பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.இவ்வாறு, அவர் பதில் அளித்தார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (8)
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-செப்-2020 12:45 Report Abuse
பாமரன் விளக்கமே ஏடாகூடமாக இருக்கு🤔🤔 பணத்தை அச்சிடுவது ... பணப்புழக்கத்தை கணக்கில் கொண்டு அது சம்பந்தமான பிரிண்டிங் முடிவுகள் அத்தனையையும் எடுப்பது ரிசர்வ் வங்கி கிடையாதா...🙄🙄 எனிவே... கலர் நல்லாயிருக்குன்னு ஒரு நோட்டு கஷ்டப்பட்டு சேர்த்து ஞாபகார்த்தமாக வச்சிருக்கேன்... திடீரென வேட்டை ஆடிடாதீங்கோ....
natarajan s - chennai,இந்தியா
20-செப்-2020 11:50 Report Abuse
natarajan s இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு நோட்டுகள் சந்தையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்க படும். உடனடியாக முடிவு எடுக்க முடியாத. கால அவகாசம் கொடுத்து வங்கியில் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும். அதன் மூலம் பதுக்கல் குறையும். பல பொருளாதார முன்னேறிய நாடுகளில் 100 மதிப்பை தாண்டி நோட்டு கிடையாது . இந்தோனேஷியா சில ஆபிரிக்க நாடுகள் விதி விலக்கு . அதிக மதிப்பு நோட்டுகள் இருப்பதால் கையாளுவது செல்வது சுலபம். ஆனால் அதிக அளவில் குறைந்த மதிப்பு நோட்டுகள் தான் புழக்கத்தில் இருக்க வேண்டும். எப்போது அரசு 10 பைசா ,25 பைசா போன்ற நாணயங்களை விலகி கொண்டதோ அப்போதில் இருந்து எல்லா விளையும் குறைந்த பட்சம் 2 ரூபாய் மதிப்பில்தான் ஏற்றப்படுகிறது. தேவையில்லாமல் 25 பைசா விலை ஏற்ற மதிப்பிற்கு 2 ரூபாய் கொடுக்கும் நிலை உள்ளது.
Bhaskaran - Chennai,இந்தியா
20-செப்-2020 10:55 Report Abuse
Bhaskaran தமிழக தேர்தல் வரும்போது இரண்டாயிரம் என்ன ஐநூறு ரூபாய் நோட்டும் செல்லாது என்று அறிவிக்கணும்
venkatan - Puducherry,இந்தியா
20-செப்-2020 10:36 Report Abuse
venkatan பணம் சம்பந்தமான அத்துமீறல்கள் அதிகம் இருப்பதால்,ரொக்க பரிவர்தனையை பெரும்பாலும் தவிர்த்து,இணைய வசதி மூலம் மேம்படுத்தி,ஊக்குவிக்க வேண்டும்.25000₹ வரை ரொக்கம் அறிவுறுத்தலாம்.இணைய பரிவர்தனைக்கு கட்டணம் அடியோடு ரத்து செய்க..
siriyaar - avinashi,இந்தியா
20-செப்-2020 08:25 Report Abuse
siriyaar நீக்கினால் ஹவாலா தொழில் பாதிக்கப்படும் சுடலை பப்பு போன்றவர்கள் ஆத்திரம் அடைவார்கள்.
GMM - KA,இந்தியா
20-செப்-2020 07:59 Report Abuse
GMM தொழில் நுட்பம் வளரும்போது மாற்றம் செய்ய வேண்டும்.2000 500 ரூபாய் திரும்ப பெற வேண்டும். 50000 மேல் பண பரிவர்த்தனை செல்லாது என அறிவிக்க வேண்டும். 100 லட்சம் கோடி கடனில் நாடு உள்ளது.
blocked user - blocked,மயோட்
20-செப்-2020 07:51 Report Abuse
blocked user சிறிது சிறிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நிறுத்தி ஒருலட்சத்துக்கு மேல் முற்றிலும் வங்கி மூலமாகவே பரிவர்த்தனை நடக்க வேண்டும். வரி ஏய்ப்பு குறையும். சென்ற முறை போல அல்லாமல் பணத்தை மாற்ற முடியாத வகையில் ரூபாய் 2000 செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
Muruga Vel - Mumbai,இந்தியா
20-செப்-2020 05:52 Report Abuse
 Muruga Vel வங்கிக்கு வரும் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து நீக்க வேண்டும் ..இப்போ மொபைல் மூலமாகவே பண பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது ..மேலும் புது நோட்டுக்களை அச்சிடுவதானால் பத்து ரூபாய் மட்டுமே அச்சடிக்க வேண்டும் ..
மேலும் 0 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)