dinamalar telegram
Advertisement

மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை; விபரம் கோரும் உயர் நீதிமன்றம்

Share

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிக வளாகத்தில், வரும் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்.,வகுப்பு துவங்குவது குறித்து மத்திய அரசுதரப்பில் விபரம் பெற்று, தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை அதலையை சேர்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018 டிச.,17ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2019 ஜன., 27ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரை மற்றும் தெலுங்கானா பிபிநகரில் எய்ம்ஸ் அமைக்க ஒரே நாளில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தெலுங்கானா பிபிநகரில் தற்போது வெளிநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் நடக்கின்றன. கட்டுமானம் முடிந்துவிட்டது. மதுரையில் கட்டுமானம் முடியும்வரை தற்காலிக வளாகத்தில் எய்ம்ஸை துவக்க வேண்டும். வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை துவக்கி, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு:
வரும் கல்வியாண்டில் 50 மாணவர்கள் சேர்க்கையுடன் எம்.பி.பி.எஸ்.,வகுப்பு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை, தேனி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரிகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கியுள்ளோம் என, தமிழக சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இவ்விவகாரத்தில் மத்தியஅரசின் நிலைப்பாடு குறித்து விபரம் பெற்று, அதன் உதவி தலைமை வழக்கறிஞர் ஜூலை 30ல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தவிட்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement