dinamalar telegram
Advertisement

அக்., 3ல் ஜே.இ.இ., தேர்வு; மத்திய அமைச்சர் அறிவிப்பு

Share

புதுடில்லி: இந்த ஆண்டிற்கான ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வு அக்., 3ம் தேதி நடத்தப்பட உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
ஐ.ஐ.டி., போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க, ஜே.இ.இ., பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
இந்த ஆண்டுக்கான அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வை கடந்த 3ம் தேதி நடத்த, முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
இது குறித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்த ஆண்டிற்கான ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வு அக்., 3ம் தேதி நடக்கும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement