Advertisement

கொரோனா பாதிப்பு: காணொலி மூலம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம்

நியூஸிலாந்து அரசு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சென்ற மாதம் 25ஆம் தேதி முதல் நான்கு வாரங்களுக்கு மக்கள் வெளியே செல்ல தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் இந்த தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலை மாறவும் உலக மக்கள் நலனுக்காகவும் கூட்டு பிரார்த்தனை செய்வது மிக நல்லது.ஆக்லாந்தில் நாங்கள் எப்போதும் ஒவ்வொரு வாரமும் கூடி சஹஸ்ரநாமம் பாராயணம் படிப்பது வழக்கம். தடை விதித்ததிலிருந்து நாங்கள் யாரும் சந்திக்க முடியவில்லை.அதனால் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ஆக்லாந்து பக்த சங்கீர்த்தன சமாஜத்தை சேர்ந்த அங்கத்தினர்கள் வலைத்தளம் காணொலி மூலம் ஒன்று கூடி விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தோம்.அதுபோல சனிக்கிழமை தோறும் கூடும் அங்கத்தினர்கள் சேர்ந்து இன்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி மற்ற ஸ்லோகங்களையும் கூறி உலகம் இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீள பிரார்த்தனை செய்தோம். தொடர்ந்து இதே போல ஒவ்வொரு வெள்ளி, சனிக்கிழமை தோறும் வலைத்தளம் காணொளி மூலம் ஒன்று கூடி உலக மக்கள் நல்ல நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்போகிறோம்.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement