Advertisement

இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலைக் கிளையின் அளப்பரிய சேவை

இலங்கை மக்கள் முகம் கொடுத்துள்ள இக் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இல்லலுறுகின்ற இக் காலகட்டத்தில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளைத் தொண்டர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போதிலும் திருகோணமலை மாவட்டத்தின் மூலை முடுக்குகளுக்குச் சென்று கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகளையும் அதனைத் தடுக்கும் முறைகள் பற்றியுமான துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகளை நடாத்தியுள்ளனர்.இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் இவ்வாறான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திருகோணமலை சுகாதார அமைச்சும், அரச நிறுவனங்களும், பொது மகக் ளும் பாராட்டியுள்ளனர். அத்துடன் பிரதான மக்கள் கூடும் இடங்களான வங்கிகள், மருந்தகங்கள், சந்தைகள், பஸ்கள, பஸ் நிலையங்கள், போன்ற முக்கிய இடங்களிலும் விழிப்புணர்வுச் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர். அதுமட்டுமல்ல திருகோணமலையைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் இளம் பரோபகாரர்களது அனுசரணையில் சில வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கியுள்ளனர்.இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத் திருகோணமலைக் கிளையினரின் இவ்வாறான முன்னெடுப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் சமூக வலைத் தளங்கள் மூலமும் பெரும் பாராட்டுதல்களைப் பெற்று வருகின்றது.

- நமது செய்தியாளர் ஞான குணாளன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement