dinamalar telegram
Advertisement

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

Share

மஸ்கட் : மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மஸ்கட்டில் உள்ள சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் சங்கத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் முனு மஹவர் பங்கேற்றார். அவர் பக்ரீத் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தியாகத்தை நினைவு கூறும் விழாவாக பக்ரீத் பெருநாள் இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து காணொலி வழியாக உர்தூ மொழி கவியரங்கமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement