dinamalar telegram
Advertisement

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்

Share

துபாய் : துபாயில் உணவு பொருளாதாரமும், உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்வது குறித்து காணொலி வழியில் விவாதம் நடந்தது. அமீரக சுற்றுச்சூழல் குழுமம் இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார்.அமீரக தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் அதிகாரி யூசுப் முஹம்மது அல் மர்சூகி, உணவு பேக்கேஜிங் பேரவையின் அலுவலர் லிசா ஜிம்மர்மென், உலக பேக்கேஜிங் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜோகன்னெஸ் பெர்க்மெய்ர் உள்ளிட்ட பலர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.அப்போது உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கூடம், கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்டோர் தன்னார்வத்துடன் பேப்பர், அலுமினியம் கேன்கள் உள்ளிட்டவற்றை வழங்கியது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement