Advertisement

தமிழகத்தின் கண்ணாடி:

பொங்ளூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த கேரளா அரசு பஸ் மீது எதிரே வந்த கண்டைனர் லாரி மோதியதில் அவிநாசி பைபாஸ் ரோட்டில் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர்.
பொங்ளூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி வந்து கொண்டிருந்த கேரளா அரசு பஸ் மீது எதிரே வந்த கண்டைனர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 9 பேர் பலியாயினர்.
கானல் நீர் : வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிய நிலையில் சிவகங்கை அருகே மதகுபட்டியில் ரோட்டில் கானல் நீர் காட்சி தருகிறது.
டேபிள் டென்னிஸ் : கோவை சிட்ராவிலுள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது இதில் பி.எஸ்.ஜி. கல்லூரியும் சென்னை எஸ்.எஸ்.என். அணியும் மோதின.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தலைமைச் செயலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இதனால் தலைமைச் செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன்பு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கடையில் மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, 25000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த கல்வி மாநாடு மற்றும் கண்காட்சியை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்து பேசினார்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நவீன் கழிப்பறையை புதுப்பித்து வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் தீபக் சந்த் தலைமையில் நடந்தது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் என்எல்சி சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் 17 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் மையம்.
புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது
சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த குன்றத்தூர் அருகே உள்ள சிக்கராயபுரம் கல்குவாரி தற்பொழுது தண்ணீர் குறைந்து காட்சி அளிக்கிறது. இடம் சிக்கராயபுரம்.
சி.ஏ.ஏ.,க்கு எதிராக கோவை கலெக்டர் அலுவலகத்தை மூஸ்லீம் அமைப்பினர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் வீரரை முட்டி தூக்கிய காளை.
சட்டசபையில்,அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப அனுமதி அளிக்காததை கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபை நிகழ்வுகளை காண வந்த சென்னை மணப்பாக்கம் தனியார் பள்ளி மாணவர்கள்...
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் முகாமிட்ட 9 காட்டு யானைகள், வடுக தோட்டம் பகுதியில் தண்ணீர் குடிக்க செல்வதற்காக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை கடந்து சென்றன.
கோவை ஜி.ஆர்.டி., கல்லூரியில் நடந்த பேஸ் டூ பேஸ் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் ஹரிஸ் உத்தமன்.
சாத்தூர் அருகே, சின்னக்காமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில், மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மாணவிக்கு பட்டத்தை வழங்கினார்.
 

Advertisement