Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

23 Sep 2020

தஞ்சாவூர் சங்கீத மகாலில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை கண்காட்சி துவங்கியது. தங்களது இல்லத்திற்கு தேவையான கொலு பொம்மைகளை தேர்வு செய்யும் இல்லத்தரசிகள். 0

23 Sep 2020

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா காய்ச்சல் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர் உதயகுமார். 0

23 Sep 2020

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டி பகுதியில் குடியிருப்புகளை யானை உடைத்து சேதப்படுத்தியது. 0

22 Sep 2020

விளைந்த கரும்புகளை அறுவடை செய்யும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் .இடம். உடுமலை பள்ளபாளையம். 0

22 Sep 2020

வெள்ளம் : வெள்ளியங்கிரி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நொய்யலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மங்கலம் நல்லம்மன் கோவிலை சூழ்ந்தபடி செல்லும் வெள்ளம். 0

22 Sep 2020

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள். 0

22 Sep 2020

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றுப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள வெள்ளத்தடுப்பு பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா 5 கிலோ மீட்டர் வரை ஆற்றங்கரையில் நடந்து சென்று ஆய்வு செய்தார். இடம்; தாம்பரம் அருகே வரதராஜபுரம். 0

22 Sep 2020

சென்னை நங்கநல்லூரில் மகளிர்களை தாக்கிய தி.மு.க வினரை கண்டித்து சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இடம் : நங்கநல்லூர். 0

22 Sep 2020

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையால் கோவை சித்திரைச்சாவடி பகுதியில் பெருகி வரும் மழை வெள்ளம். 0

22 Sep 2020

துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டத்தில் மூன்று தினங்களுக்கு பிறகு தண்ணீர் விநியோகத்தால் அதிக எண்ணிக்கையில் காலிகுடங்களுடன் மக்கள் காத்துகிடந்தனர். 0

21 Sep 2020

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முளைத்த மெகா சைஸ் காளான். 0

21 Sep 2020

கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் கல்லாற்றின் வழியாக வருவது கண்களுக்கு இதம் அளிக்கிறது. இடம் மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே. 0

21 Sep 2020

நவராத்திரி விழாவை ஒட்டி வட மாநிலத்தினரால் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு தயார் செய்யப்பட்டு வரும் துர்கா சிலை.இடம் கோவை வரதராஜபுரம் 0

21 Sep 2020

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடுகிறது. இடம் நெல்லி மலை அருகே விலா மரத்தூர். 0

21 Sep 2020

யானையை அதன் இருப்பிடத்திலேயே பார்ப்பது தனி அழகுதான் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் பசுமைக்கு திரும்பியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் முளைத்துள்ள புற்களை ஆசுவாசமாய் சாரல் மழையில் நனைந்தபடியே சுவை கொள்வது அழகுதான்..!இடம் - கோவை குற்றாலம் வனப்பகுதி 0

21 Sep 2020

சென்னை தலைமை செயலகத்தில் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவங்கி வைத்தார். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள். 0

21 Sep 2020

உடுமலை அமராவதி அணை நிரம்பி ஷட்டர் வழியாக வெளியேறும் உபரி நீர் முன்பு உள்ள பாலத்தில் அமர்ந்து மொபைல் போன் மூலம் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள். 0

21 Sep 2020

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் கோழிகமுத்தியில் வனத்துறை சார்பில், நடந்த யானைகள் முகாமிற்கு வந்த கும்கி யானை கல்பனா வயது மூப்பு காரணமாக இறந்தது. 0

21 Sep 2020

துர்கா பூஜையை முன்னிட்டு வடமாநிலத்தவர்கள் வழிபடுவதற்காக தயார் செய்யப்படும் துர்கா சிலைகள்.இடம்: வால்டாக்ஸ் சாலை, சென்னை. 0

21 Sep 2020

சிங்கப்பூரில் நடந்த அறிவியல் சார்ந்த போட்டியில் பதக்கம் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவன் மைக்கேல் ஜான்சன் , பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். 0
Share
 

Advertisement