dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

21 Sep 2021

4 மணி நேர பிளாங்க் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட பள்ளி மாணவன் சுபாஷ். இடம் : சி.ஆர்.பி.எப் வளாகம், ஆவடி, சென்னை

21 Sep 2021

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் நீலவானம் பளிச்சிடும் நிலையில் பூங்காவில் மலர்களை இரசித்த பயணிகள்.

21 Sep 2021

சென்னை, விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாநகராட்சி பூங்கா.

21 Sep 2021

சென்னையில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென வானிலை மாறி வானில் கரு மேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. இடம் : எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.

21 Sep 2021

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்துவிட்டு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி.

21 Sep 2021

நவராத்திரி விழாவை ஒட்டி வட மாநிலத்தினர் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்காக சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடம்: கோவை சிங்காநல்லூர்.

21 Sep 2021

தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேஸ்குமார், சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அருகில் முதல்வர் ஸ்டாலின்.

21 Sep 2021

திருப்பூர், ராயபுரம் குடிநீர் தொட்டி பகுதியில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு (ஆவோஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விண்ணப்பம் எழுதும் பணியில் ஈடுபட்ட பா.ஜ.,வினர்.

21 Sep 2021

கோவை வேளாண் பல்கலை வளாகத்தில் சூரியகாந்திப் பூக்கள் பயிரிடப்பட்டு தற்பொழுது பூத்துக் குலுங்குகின்றன

21 Sep 2021

ஊட்டி நகராட்சி துப்புரவு தொழிலாளர் குடியிருப்பை தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.

21 Sep 2021

கோவை சூலூர் அருகே கோவிலில் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ( உட்கார்ந்திருப்பவர்கள் இடமிருந்து) திருமூர்த்தி வடிவேல், முருகேஷ்.

21 Sep 2021

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில் மற்றும் வாகனத்தை கலால் போலீசார் பறிமுதல் செய்ததை விழுப்புரம் எஸ்.பி.,ஸ்ரீநாதா பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.

21 Sep 2021

ரயில் நிலையங்களில் பயணிகளிடம் திருடுபோன விலை உயர்ந்த 26 செல்போன்களை தாம்பரம் ரயில்வே போலீசார் மீட்டு அதை ரயில்வே டி.எஸ்.பி., ஸ்ரீகாந்த் உரியவர்களிடம் ஒப்படைத்தார் .இடம் : தாம்பரம் ரயில்வே ஷ்டேஷன். .

21 Sep 2021

சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் மூலமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்ட விநாயகர் சிலைகள் திரும்பப் பெறப்பட்டு கோவில் தெப்பக்குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது

21 Sep 2021

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ளபூம்புகார் நிறுவனத்தில் கொலு பொம்மைக் கண்காட்சி துவங்கியது. இதில் இடம்பெற்றுள்ள பொம்மைகளை ஆர்வமுடன் பார்வையிடும் சிறுமி.

21 Sep 2021

ராஜ்யசபா தேர்தலையொட்டி புதுச்சேரி அண்ணாமலை ஓட்டலில் நடந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூன்று சுயோட்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது..

20 Sep 2021

ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ளே அனுமதிக்கததால் தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்.

20 Sep 2021

ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பல்கலை தின விழா கொண்டாடப்பட்டது.இதில், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வெங்கடாசலம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் (இடமிருந்து) பதிவாளர் சுவாமிநாதன், இணை வேந்தர் செங்குட்டுவன் மற்றும் துணை வேந்தர் விஜயராகவன்.இடம்: போரூர், சென்னை.

20 Sep 2021

சேலம் - விருத்தாச்சலம் ரயில் பாதையை, மின் வழிப்பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. அதில் செம்பு மின்வடம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். இடம்: சத்திரம் ரயில் மார்க்கெட், சேலம்.

20 Sep 2021

மத்திய அரசைக் கண்டித்து சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் முன் கருப்பு கொடியேந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., உதயநிதி. உடன் கட்சியினர்.

20 Sep 2021

கடலூரில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் பாலசுப்ரமணியம் எம்.எல்.ஏ., அய்யப்பன்.

20 Sep 2021

திண்டுக்கல் ராமையன்பட்டி குளத்து தண்ணீரில் வெண் மேகங்கள் மிதக்கும் கண்கொள்ளாக் காட்சி..

20 Sep 2021

கோவை கூட்ஸ் செட் ரோட்டில் மாபெரும் தூய்மை பணி முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

20 Sep 2021

பொறியியல் படிப்பிற்கு 7.5 சதவீத சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அருகில், அமைச்சர்கள் மகேஷ், பொன்முடி, மா.சுப்பிரமணியன். இடம்:.அண்ணா பல்கலை வளாகம், சென்னை.

20 Sep 2021

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் தூர்வாரும் மாபெரும் பணி முகாம் துவங்கியது. இடம் : பள்ளிக்கரணை.

20 Sep 2021

கோவை போத்தனூர் - பொள்ளாச்சி இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் தண்டவாளத்தில் அதிகாரிகள் கொண்ட சிறப்பு ரயிலில் வேகம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

20 Sep 2021

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலமாக அரிசி மூட்டைகள் கடலூர் முதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டது. மூட்டைகளை லாரியில் ஏற்றி குடோனுக்கு அனுப்பி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

20 Sep 2021

உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவினர்.

20 Sep 2021

வேளாண் சட்டங்கள் ரத்து , பெட்ரோல் , டீசல் , சமையல் எரிவாயு விலை உயர்வு, பொது சொத்துக்களை தனியார் மயமாக்கல் கண்டித்து தாம்பரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு முன்னிலையில் அவரது வீட்டு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது உடன் தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா உள்ளார்.

20 Sep 2021

கோவை பீளமேட்டில் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு மற்றும் தொலைபேசி ஒட்டு கேட்பு அதை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20 Sep 2021

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

20 Sep 2021

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடந்த உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் பரிசு வழங்கி பாராட்டினார்.

20 Sep 2021

கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட உள் நோயாளியின் உறவினர், அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியரை தாக்கியதை கண்டித்து அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20 Sep 2021

புறா படை!மாநகருக்குள் நாங்கள் படையெடுக்க கூடாதா என கேட்கின்றனவோ, இந்த புறாக்கள்?இடம்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு

20 Sep 2021

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை ரசித்த பயணிகள்.

20 Sep 2021

புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்.

19 Sep 2021

கடலூர் அருகே உள்ள சான்றோர் பாளையம் அரசு நிலத்தில் கிராவல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை சிறைப்பிடித்த மக்களிடம் இன்ஸ்பெக்டர் உதயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

19 Sep 2021

சுகமான சுமை...! சுற்றுலா வந்த பயணி ஒருவர் தனது குழந்தையை தோலில் சுமந்து கொண்டு சுகமான பயணத்தை மேற்கொண்டார் ; இடம் புதுச்சேரி சட்டசபை சாலை.

19 Sep 2021

ஞாயிற்றுகிழமை அத்தியவாசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் கோவை பெரியகடை வீதி மார்க்கெட் வெறிச்சோடியது.

19 Sep 2021

கரூர் நகர பகுதியில் மழை பெய்தது. அமராவதி பாலம் லைட் ஹவுஸ் பகுதியில் மழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

19 Sep 2021

உழவர் சந்தையில் காய்கறிகளை எடைபோடுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள எடைகற்கள். இடம்: உடுமலை

19 Sep 2021

விஷுவல் படம்:அழகான மரங்கொத்தி பறவை.இடம்: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம்.

19 Sep 2021

சென்னையில் நடந்த இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்த மக்கள். இடம் : மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்.

19 Sep 2021

ராமகோபாலன் பிறந்தநாளையொட்டி உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன்பு அவரது படத்திற்கு மரியாதை செலுத்திய இந்துமுன்னணி தொண்டர்கள்.

19 Sep 2021

விழுப்புரம் மாவட்டத்தில் 100% சதவீதம் பொதுமக்கள் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை யொட்டி, நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் கட்டாயமாக முக கவசம் அணியவும் தடுப்பூசி போடவும் வலியுறுத்தினர்.

19 Sep 2021

சென்னையில் நடந்த இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்த மக்கள். இடம் : மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்.

19 Sep 2021

சென்னையில் நடந்த இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள். இடம் : மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செனாய் நகர்.

19 Sep 2021

விழுப்புரம் கட்டுமான மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு அரசு நலவாரிய மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வாரியத்தலைவர் பொன்குமார் பேசினார். அருகில் மாவட்ட தலைவர் அலெக்ஸ் அண்ணாதுரை.

19 Sep 2021

விழுப்புரம் சபா அகடாமி இந்தி தின விழாவையொட்டி ஹிந்தி பாடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் பிரீத்தா பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

19 Sep 2021

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையை திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு சிவாச்சாரியார்கள் சமூக நல சங்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

19 Sep 2021

புரட்டாசி மாதம் துவங்கி உள்ளதால், அசைவப் பிரியர்களின் கூட்டம் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்ட சென்னை நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்.

19 Sep 2021

ஞாயிற்றுகிழமை அத்தியவாசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் கோவையிலுள்ள சாலைகள் வெறிச்சோடின. இடம்: பெரியகடைவீதி.

19 Sep 2021

கோவை தொண்டாமுத்தூரில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் மோதிய ஸ்டிரைக்கர்ஸ் எப்.சி., மற்றும் மணிஸ் எப்.சி., அணியினர்.

19 Sep 2021

புதுச்சேரி சாரம் திடலில் அகில உலக இந்திய இளைஞர்கள் கூட்டமைப்பு நிறுவனர் விஜய் வெங்கடேசன் தனி நபராக நின்று கொண்டு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

19 Sep 2021

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகம் எதிரே உள்ள பாரதி பூங்கா நுழைவு வாயில் மூடப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து நிற்கின்றனர்.

19 Sep 2021

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள். இடம்: தெற்கு மாட வீதி, திருவெற்றியூர்.

19 Sep 2021

சென்னையில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த தலைமை செயலர் இறையன்பு மற்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி.இடம்: ஆர்.ஏ.புரம்.

19 Sep 2021

எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார். அருகில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்.

19 Sep 2021

மேட்டுப்பாளையம் வனசரக மர கிடங்கில் தயாராகிவரும் வேழம் இயலியல் மையமத்தில் இயற்கை தாவரம் லண்டாணா எனும் உன்னி செடியிலிருந்து உருவாக்கியுள்ள தத்ரூபமான யானை பொம்மை.

19 Sep 2021

எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணியர்.

19 Sep 2021

கோவை வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நிறைவடைந்து இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிப் பொருளாக உள்ளது.

19 Sep 2021

கோவை கணியூரில் உள்ள கேபிஆர் கல்லூரியில் பளுதூக்கும் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவியர் தங்களின் திறமையை நிரூபித்தனர்

19 Sep 2021

வாகனங்களில் மற்றும் பேருந்துகளில் முக கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களை எச்சரித்த போக்குவரத்து போலீசார். இடம் : துரைப்பாக்கம்

19 Sep 2021

வாகனங்களில் மற்றும் பேருந்துகளில் முக கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்களை எச்சரித்த போக்குவரத்து போலீசார்.இடம் : துரைப்பாக்கம்

19 Sep 2021

ஆறுதான் அடர்வனம் இல்லை.... :

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் பாலம் அருகே நொய்யலாற்றில் பத்தடி உயரத்திற்கு செடிகள் முளைத்து புதர்மண்டியுள்ளது. மழைக்கு முன்பு சுத்தப்படுத்த வேண்டும்.

19 Sep 2021

திருப்பூர் நகரப் பகுதியில் மரங்கள் குறைவாக இருப்பதால் பறவைகள கட்டடங்களிலேயே ஓய்வு எடுக்கின்றன. இடம்: ஊத்துக்குளி ரோடு.

19 Sep 2021

கோவை அவினாசி ரோட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு இடையே கனரக வாகனங்கள் யுடர்ன் அடித்து திரும்பி செல்வதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.

19 Sep 2021

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொதுமக்கள்.இடம் : கண்ணகி நகர், சென்னை

19 Sep 2021

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள், கோயிலுக்குள். செல்ல அனுமதி இல்லாத்தால், கோபுர தரிசனம் செய்தனர்.

19 Sep 2021

கோவை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், டிவிஷன் போட்டிக்கான தேர்வு போட்டிகள் நேரு ஸ்டேடியம் அருகே உள்ள கூடைபந்து மைதானத்தில் நடந்தது. இதில் ஜெய பாரதி அணியும் மெராக்கில் பி.பி.சி., அணியும் மோதின.

19 Sep 2021

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மெரினா கடற்கரையில் வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

19 Sep 2021

கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் நோயாளி இறந்ததை தொடர்ந்து உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

19 Sep 2021

கோவை வ.உ.சி., மைதானத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

19 Sep 2021

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு. வெறிச்சோடி காணப்பட்டது.

19 Sep 2021

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் 94 வது பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் அமைப்பு தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

19 Sep 2021

திருப்பூர், தெற்கு எம் எல் ஏ அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்த காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள்.

19 Sep 2021

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள்.

19 Sep 2021

புரட்டாசி மாதம் முதல் வாரம் துவங்கிய நிலையில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த மக்கள்.

19 Sep 2021

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி உடுமலை வடக்கு ஒன்றியம் பா.ஜ., சார்பில் ராஜகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்ய தொண்டர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

19 Sep 2021

நோய் தொற்று காலங்களில் இப்படியுமா... :

ஞாயிற்று கிழமை அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் கோவை மொத்த மீன் மார்க்கெட் பூட்டப்பட்டது. இதனையடுத்து மார்க்கெட் செல்லும் வழியில் மீன்கடைகள் அமைக்கப்பட்டதால் ஏராளமானோர் மீன் வாங்க வரத்துவங்கினர்.

19 Sep 2021

திருப்பூர், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில நடந்த தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

19 Sep 2021

திருப்பூர், தெற்கு எம் எல் ஏ அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்த காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள்.

19 Sep 2021

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில் புரட்டாசி மாதம் ஒருநாள் பிரம்மோற்சவத்தில் உற்சவர் பெருமாள் அன்னவாகனத்தில் அருள்பாலித்தார்.

19 Sep 2021

திருப்பூர், அடுத்த அருள்புரத்தில் நடந்த தடுப்பூசி முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பரமணியம் ஆய்வு செய்தார்.

19 Sep 2021

திருப்பூர், தென்னம்பாளையம் மீன் மார்கெட்டில் விலை குறைவால் புரட்டாசி மாதத்திலும் அலைமோதிய மக்கள் கூட்டம்.

19 Sep 2021

நீலகிரியில் பூச்சிகளை உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு.

19 Sep 2021

தஞ்சாவூர் எஸ்பி அலுவலகத்தில் குழந்தைகள் நேச மையத்தினை, மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

19 Sep 2021

நாளிதழ்கள் மற்றும் தமிழக அரசு என்றுபொதுமக்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கொரோனா தொற்றின் அச்சம் சிறிதும் இல்லாமல், சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று குவிந்த மக்கள் கூட்டம்

19 Sep 2021

சாலை ஓர சோலைகள்: திருப்புத்தூர்-காரைக்குடி ரோடு மண்மேல்பட்டி அருகே இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களால் அப்பகுதி சோலையாக காட்சியளிக்கிறது.

19 Sep 2021

மழை பெய்ததை தொடர்ந்து ரெட்டியார்சத்திரம் அருகே பருத்தி விதைக்க உழவுப்பணி நடந்தது.

19 Sep 2021

பெருமாள் படங்கள்

19 Sep 2021

பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தன.: இடம் : தேனி மாவட்டம் லோயர்கேம்ப்

19 Sep 2021

பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தன. இடம்:தேனி மாவட்டம் லோயர்கேம்ப்

18 Sep 2021

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து, செய்யப்பட்டதை தொடர்ந்த பக்தர்கள் அருகில் உள்ள கெடிலம் நதிக்கரையில் மறைமுகமாக மொட்டை போட்டுக் கொண்டனர்.

18 Sep 2021

பச்சை பசெலென காணப்படும் தென்னை மரங்களுக்கு நடுவே காணப்படும் வீடுகள்.இடம்.உடுமலை வல்லகுண்டாபுரம்.

18 Sep 2021

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் இன்றி புரட்டாசி மாத சனிப்பிரதோஷத்தில் ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, சிறப்பு பூஜை நடந்தது

18 Sep 2021

திரையரங்குகளில் கூட்டம் இல்லாமல் உள்ளது.இடம்: சாந்தி தியேட்டர், கோவை.

18 Sep 2021

திண்டுக்கல்லுக்கு ரயிலில் வந்த உரம் மூடைகளை லாரியில் ஏற்றும் பணி நடந்தது.

18 Sep 2021

புதிதாக யாரோ வர்றாங்களாம்... வாங்க போய் பார்ப்போம் என்பது போல கவர்னர் மாளிகை வளாகத்தில் அழகாய் நிற்கிறது மான்கள் கூட்டம். இடம்: கிண்டி.

18 Sep 2021

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோவை தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவைசாதித்த அரங்கநாதர்.

Share
 

Dinamalar iPaper

Advertisement