dinamalar telegram
Advertisement

தமிழகத்தின் கண்ணாடி

18 Sep 2021

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோவை பி.என்.புதூர் ஸ்ரீ பூமி நீளாதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சேவைசாதித்த பெருமாள்.

18 Sep 2021

புரட்டாசி சனிக்கிழமை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பூர், வீரராகவப்பெருமாள் கோவில் முன் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் கோவிலுக்கு வெளியில் தீபம் ஏற்றி வழிபட்ட மூதாட்டி.

18 Sep 2021

விஷ்வ ஹிந்து வித்யா கேந்திராவின் புதிய அலுவலகமான வேதாந்த பவனத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் ஜி திறந்து வைத்தார். உடன் (இடமிருந்து வலம்) விஷ்வ ஹிந்து வித்யா கேந்திராவின் பொது செயலர் கிரிஜா சேஷாத்ரி, முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ், இணை பொதுச் செயலர் கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்டோர். இடம் : தி.நகர், சென்னை.

18 Sep 2021

அரசாங்கம் என்னதான் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நாங்கள் அப்படி தான் செல்வோம் என கடலூர் பஸ் நிலையத்தில் அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகள் ஒருவர்கூட மாஸ்க் அணியாமல் சென்றனர்.

18 Sep 2021

பசுமையாக காட்சியளிக்கும் விருதுநகர் எஸ்.பி., அலுவலகம்.

18 Sep 2021

பசுமைக்கு மத்தியில் ரம்யமாக காட்சியளிக்கும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம்.

17 Sep 2021

கோவை பகுதியில் சிறிது நேரம் பெய்த மழைக்கே கிக்கானி பள்ளி அருகேயுள்ள ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் தத்தளித்து வந்த வாகனங்கள்.

17 Sep 2021

திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியனில், வளர்ந்துள்ள புல் மற்றும் செடிகளை மேய்வதற்காக மாட்டு உரிமையாளர்கள் சிலர் மாடுகளை சென்டர் மீடியனில் கட்டிவைத்து மேயவிடுகின்றனர். மேய்ந்து கொண்டிருக்கும் மாடு திடீரென சாலையை இறங்குவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றன.

17 Sep 2021

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் சோதனையில் பிடிபட்ட போலி மதுபாட்டில்களை ரோடு ரோலர் மூலம் அழித்த மதுவிலக்கு போலீசார்.

17 Sep 2021

விழுப்புரத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இயங்கிய கடைக்கு பல லட்சம் பாக்கி வைக்கப்பட்டிருந்ததால், அக்கடையை, மூடி அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

17 Sep 2021

பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பா.ஜ.,வினர் பொதுமக்களுக்கு இலவசமாக மீன் வழங்கி கொண்டாடினர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை.

17 Sep 2021

குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

17 Sep 2021

திருவெற்றியூர் துறைமுக பணிகளை மத்திய அமைச்சர் எல்.முருகன், ஆய்வு செய்தார்.

17 Sep 2021

கோவை உக்கடம் தினசரி சில்லரை மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் சமீரன், முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார், அருகே மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உள்ளிட்டோர்.

17 Sep 2021

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி கோவை மக்கள் சேவை மையம் சார்பில் இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மற்றும் ஷார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் மோகன சுந்தரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

17 Sep 2021

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜ., சார்பில் கோவை போத்தனூர் - வெள்ளலூர் மெயின் ரோட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

17 Sep 2021

புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு இளைஞர் காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

17 Sep 2021

கோவை விமான நிலைய ரோட்டில் பா.ஜ., கொடி மற்றும் பெயர் பலகையை போலீசார் அகற்றியதால் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அப்போது தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைக்க முயன்றார் .

17 Sep 2021

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டி கோவை ராஜ வீதி, அன்னை நர்சிங்ஹோம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கி தெற்கு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.

17 Sep 2021

சிறிய சுரங்கப் பாதை வழியில் பெரிய கனரக வாகனங்களை அதிக பாரத்தோடு கொண்டு சென்று இடையூறு ஏற்பட்டால் அனைத்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஏற்படும். இடம்: கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி

17 Sep 2021

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி கோவை போத்தனூர் - வெள்ளலூர் மெயின் ரோட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இலவச உணவு வழங்கிய பா.ஜ., மாநில துணைத்தலைவர் கனகசபாபதி உள்ளிட்ட நிர்வாகிகள்.

17 Sep 2021

விழுப்புரம் அடுத்த கோலியனூரில் இடஒதுக்கீட்டில் உயிர்நீத்த தியாகிகள் நினைவு தூணுக்கு வீரவணக்க நாளை முன்னிட்டு பா.ம.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.

17 Sep 2021

விழுப்புரம் பாலாஜி நகரில் வசிக்கும், விக்ரவண்டி நில அளவையர் தேவி, பட்டா மாற்றி தர லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

17 Sep 2021

புதுச்சேரியில் பா.ஜ., எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி அளித்தார்.

17 Sep 2021

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

17 Sep 2021

சென்னை யானைக்கவுனி பகுதியில் உரிமம் இன்றி செயல்பட்ட ஐந்து கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.இடம்: வால்டாக்ஸ் சாலை .

17 Sep 2021

திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

17 Sep 2021

விருதுநகரில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட வானம்

17 Sep 2021

அரசு உதவித்தொகை வழங்க கோரி திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்தனர்.

17 Sep 2021

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், எஸ். எப்.ஐ., சார்பில், நீட் தேர்வை ரத்து செய்யகோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

17 Sep 2021

கோவை ராஜவீதி, துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1 மற்றும் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழை பள்ளி முதல்வர் வழங்கினார்.

17 Sep 2021

விருதுநகர் எஸ்.பி., அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளால் நடப்பட்ட மரக்கன்றுகள் அவரின் பெயர்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது

17 Sep 2021

கடலூர் உச்சிமேடு கிராமத்தில் ஊட்டச்சத்து மாத விழாவில் உணவு தானியங்களால் வரையப்பட்ட ஓவியங்களை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி பார்வையிட்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்.

17 Sep 2021

ஒரு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வருவதால் நீண்ட தூரம் சென்று தள்ளுவண்டியில் குடிநீர் எடுத்து வரும் பெண். இடம்:செங்குன்றாபுரம்.

17 Sep 2021

விருதுநகர் மாவட்ட பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசின் திட்டங்களை இலவசமாக செய்து தர பொது இ-சேவை மைய கட்டட திறப்பு விழா பூஜை நடந்தது.

17 Sep 2021

ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சார்பாக , கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டினர்.

17 Sep 2021

தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது அகலரயில பாதை முடிவடைந்த நிலையில் டீசல் இன்ஜீன் மூலம் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது . இடம் : தாம்பரம்

17 Sep 2021

ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக வைக்கப்பட்ட தொட்டிகளில், செடிகளில் பூக்கள் பூக்க துவங்கியது.

17 Sep 2021

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையின் மையதடுப்பில் மாநகராட்சி சார்பில் வண்ணமலர்கள் பூக்கும் செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

17 Sep 2021

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுரிராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேவைசாதித்தார்.

17 Sep 2021

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாளை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட அரசு ஊழியர்கள்.

17 Sep 2021

சென்னை அசோக்நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்பிளஸ் 2 முடித்த மாணவியருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

17 Sep 2021

திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

17 Sep 2021

தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, பி.எம்.எஸ், தொழிற்சங்கம் சார்பில் புதிய கிளை துவக்கப்பட்டது.

17 Sep 2021

புரட்டாசி மாத முதல் நாள் மற்றும் சுக்ல பக்ஷ ஏகாதசி நாளில் காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

17 Sep 2021

ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில், கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் , குற்றம் சாட்டப்பட்ட நால்வர்களுக்காக அஜாராகும். வக்கில்கள் செந்தில் , விஜயன் மற்றும் முனிரத்னம்.

17 Sep 2021

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழை பெற்ற மாணவியர்

17 Sep 2021

கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்டிருந்த பல்லாவரம் சந்தை செயல்பட துவங்கின. இடம் : பல்லாவரம்

17 Sep 2021

உள்ளாட்சி தேர்தலில் நூறு சதவீத வாக்கு செலுத்த மகளிர் சுய உதவி குழு சார்பில் வண்ணக்கோலம் வரையப்பட்டுள்ளன. இடம் : முடிச்சூர்

17 Sep 2021

தமிழக அரசின் கைத்தறி துணிகள் விற்பனை வாகனம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதிக்கு வந்தது.

17 Sep 2021

கோவை ராஜவீதி, துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1 மற்றும் 2 மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மகிழ்ச்சியில் செல்பி எடுத்து கொண்டனர்.

17 Sep 2021

பொள்ளாச்சி -போத்தனூர் வழித்தடத்தில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்த, பாலக்காட்டில் இருந்து சிறப்பு ரயில், பொள்ளாச்சி வந்தது.

17 Sep 2021

புதுச்சேரி மணவெளி தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையை சபாநாயகர் செல்வம் வழங்கினார். அருகில் குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் அனில்குமார், இளநிலை பொறியாளர் உதயகுமார்.

17 Sep 2021

குடியிருப்புக்கு அனுமதி பெற்று வணிக வளாகங்கள் நடத்தி வந்ததால் தரை தளம் உட்பட ஐந்து தளங்களுக்கு சி . எம் . டி . ஏ ., அதிகாரிகள் சீல் வைத்த தனியார் அடுக்கமாடி கட்டடம் .இடம் : சேலையூர் கேம்ப் சாலை .

17 Sep 2021

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில் மூடப்பட்டதால், புரட்டாசி 1ம் தேதியான இன்று கோயிலின் சிறிய நுழைவாயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

17 Sep 2021

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணி தொடர்பாக கலெக்டர் மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

17 Sep 2021

தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது அகலரயில பாதை முடிவடைந்த நிலையில் டீசல் என்ஞ்சின் வெள்ளோட்டம் பார்ப்பதற்க்கு தேங்காய் உடைத்து அனுப்பிவைத்தனர். இடம்: தாம்பரம் .

17 Sep 2021

ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சார்பாக , கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி காட்டினர்.

17 Sep 2021

மயில் மேல் மைனாவும் காகமும் பயணத்தை தொடர்ந்த இடம்: கோவை, சுங்கம்.

16 Sep 2021

முன்னாள் அமைச்சர் வீரமணியின் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவாணி டாலர், 623 பவுன் தங்க நகைகள்.

16 Sep 2021

சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.இடம்.டி.பி.சத்திரம், அண்ணாநகர்.

16 Sep 2021

உடுமலை பெரியகோட்டையில் கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள வெண்டை செடிகள்.

16 Sep 2021

சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில், வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு, சிடி ஸ்கேன் வாயிலாக நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மருத்துவமனையின் டாக்டர் ஸ்ரீதர்.அருகில் டாக்டர்கள் அருண்குமார் நவீன் மற்றும் பொன்னையா.இடம்: அமைந்தகரை.

16 Sep 2021

தஞ்சாவூர் - திருவையாறு ரிங் ரோடு பைபாஸ் சாலையில், ராஜேந்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெண்ணாறு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள, சோதனைச்சாவடியில் பூச் செடிகளை கொண்டு அலங்கரித்து பராமரிக்கும் போலீஸ் கலியராஜ்.

16 Sep 2021

கோவை மாவட்டம் பீளமேடு கண்டியப்பன் சமூக கூடத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் வந்த பெண்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

16 Sep 2021

அந்தி சாயும் நேரமிது... இது ஒரு பொன்மாலை பொழுது... இயற்கைக்கு அளவேது... இடம்: கோவை குறிச்சி குளம்.

16 Sep 2021

தேனி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

16 Sep 2021

இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழா ஆண்டு மற்றும் இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டையொட்டி இந்திய விமானப் படை வீரர்களின் கிழக்கு கடலோர விழிப்புணர்வு மிதிவண்டி சுற்றுப்பயணத்தை கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

16 Sep 2021

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகப் பெருமான்.

16 Sep 2021

உடுமலை தீயணைப்பு துறை சார்பில், தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தீ தடுப்பு குறித்த பயிற்சி முகாம் தத்ரூபமாக செய்து காட்டி விளக்கமளித்தனர்.

16 Sep 2021

கோவை விளாங்குறிச்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜையை ஒட்டி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த காமாட்சி அம்மன்.

16 Sep 2021

வேலூரில் நடந்த, ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளியின் 40வது ஆண்டு அகில இந்திய கராத்தே போட்டியில், விழுப்புரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவிடம் வாழ்த்து பெற்றனர். அருகில் பயிற்சியாளர் கிருபாகரன்.

16 Sep 2021

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்வது முன்னிட்டு முகூர்த்த பந்தக்கால் நடப்பட்ட ராஜகோபுரம் முன் பக்தர்கள் வழிபட்டனர்.

16 Sep 2021

புதுச்சேரியில் சுகாதார துறையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டது.

16 Sep 2021

திருவண்ணாமலையில் நடைபெறும் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற சசிகலா

15 Sep 2021

அயோத்தி ராமர் கோவிலுக்காக ஹிந்துபரிரக்க்ஷன சமீதி சார்பில் வடிக்கப்பட்டஉற்சவ மூர்த்திகளுக்கு சென்னை, தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானகோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

15 Sep 2021

மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் பொதுமக்கள் பூச்செடிகளை அதிகமாக வாங்கி செல்கிறார்கள்.இடம்: சிவகங்கை தாலுகா அலுவலகம் ரோடு.

15 Sep 2021

சிவகங்கையில் கனரா வங்கி சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் கடன் வழங்கும் விழாவில் பங்கேற்றவர்கள்.

15 Sep 2021

திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண விழா திருமண்டபம் அருகே உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு வாழைமரம் மற்றும் மலர் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது

15 Sep 2021

சுற்றி பார்க்கும் இடமெல்லாம் கான்கிரீட் காடு அதனிடையே ஆங்காங்கே பசுமை கலந்த மரங்கள் என மாறிய கோவை மாநகரின் அழகு கண்ட இடம் : கவுண்டம்பாளையம்.

15 Sep 2021

புதுச்சேரி அடுத்த உசுடு ஏரி போட் ஹவுஸ் முன்பு சாலையோரத்தில் ஏரி மண் கொட்டப்பட்டு உள்ளது.

15 Sep 2021

ஊட்டியில், பா.ஜ., சார்பாக தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய , பா.ஜ., தேசிய சிறுபான்மையினர் அணி செயலர் வேலூர் இப்ராஹிம் பேசினார்.

15 Sep 2021

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், தலைமைச் செயலகம் என்ற பழைய கல்வெட்டு பொருத்தும் பணி நடந்து வருகிறது.

15 Sep 2021

பச்சை நிறமே... பச்சை நிறமே... நெல் நாற்று நடவு செய்யப்பட்ட வயல் பசுமையாக காட்சியளிக்கிறது. இடம் : கோவை சாடிவயல் அருகே.

15 Sep 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் அலுவலகத்தை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பூட்டி ‛சீல்' வைத்துள்ளனர்.

15 Sep 2021

நவராத்திரியை முன்னிட்டு கொலுவை அலங்கரிக்க விற்பனைக்கு வந்துள்ள சுவாமி பொம்மைகள். இடம் : தேனி.

15 Sep 2021

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு புத்தக விற்பனை கண்காட்சியை துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து புத்தகங்களை பார்வையிட்டார்.

15 Sep 2021

உணவிற்காக கூட்டம், கூட்டமாக வந்த பெலிக்கன் பறவைகள் தண்ணீரில் நீந்தியபடி மீன்களை தேடுகின்றன. இடம்: கோவை பெரியகுளம்.

15 Sep 2021

‛வீடு தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் கோவை கல்வீரம்பாளையத்தில் நோயாளிகளின் வீடு தேடி சென்று சுகாதாரத்துறையினர் மருந்து வழங்கினர்.

15 Sep 2021

சென்னை புறநகர் பகுதியில் உள்ள பரங்கிமலை ஊராட்சிகளில் தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவிருப்பதால் சிட்லப்பாக்கம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

15 Sep 2021

அண்ணாதுரை 113வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலை அருகே வைக்கப்பட்ட படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின். அருகில் கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள்.

15 Sep 2021

இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கியதால் ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவ மாணவிகள். இடம் : தரமணி, சென்னை.

15 Sep 2021

துவங்கியாச்சு தேர்தல் திருவிழா... ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் தொடங்கியதால், திண்டிவனம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுக்களை வாங்கிய வேட்பாளர்கள்.

15 Sep 2021

வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் நீரில் சிக்கித் தவிப்பவர்களை தத்ரூபமாக மீட்கும் ஒத்திகையில் ஈடுபட்டனர். இடம்: இந்திரா நகர், காசிமேடு, சென்னை.

15 Sep 2021

இயற்கை எழில் சூழ்ந்த மலையின் நடுவே பரந்து விரிந்து காணப்படும் திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை. நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து காண்போரை பரவசப்படுத்துகிறது.

15 Sep 2021

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி விநாயகர் சிலை ஊர்வலத்தில் வந்து கடற்கரை சாலையில் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது

14 Sep 2021

விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் வைத்து கொண்டாடப்பட்டது, சிலைகளை கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இடம் : புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே.

14 Sep 2021

ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் துருப்பிடிக்காத வகையில் ரசாயனம் கலந்த அலுமினியம் கலரை ஊழியர்கள் பூசினர்

14 Sep 2021

ஊட்டி, பந்தலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. நீண்ட நேரம் பயனாளிகள் காத்திருந்தும் அதிகாரிகள் வராததால் மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி அடைந்தனர்.

14 Sep 2021

தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகத்தில், தலைமை செயலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இ- அலுவலகம் தொடர்பான செய்முறை பயிற்சி முகாம் நடந்தது. இடம்: சென்னை, அண்ணா சாலை.

Share
 

Dinamalar iPaper

Advertisement