Advertisement

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!:

நீ பாதி... நான் பாதி... : பிரமித்து நின்ற மலை முகடுகள், ஊர்வலம் போன மேகம், ஒரு நிமிடம், தன் பயணத்தை சட்டென்று நிறுத்தியது. இடைவெளியில், எட்டிப்பார்த்த நீலமும் சிலாகித்து கொண்டது. வானம் கொடுத்த தாய்ப்பாலில் தெரிந்த அழகு தான் இத்தனைக்கும் காரணம். இயற்கையும் வியந்து பார்த்த தருணம். நீ பாதி... நான் பாதி... இதுதானே வாழ்க்கை பாடம்; அதை கச்சிதமாக கபளீகரம் செய்து கொண்டது புகைப்படம்.இடம்: பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை,
மான்களும், பறவைகளும் இன்புற்றிருக்கும் இடம்: பிராங்க்பர்ட், ஜெர்மனி.
தரைவிரிப்பு விற்பனையாளர் அயர்ந்து தூங்கும் இடம்: டெஹ்ரான், ஈரான்.
தென்கொரியா சீயோலையும் புழுதி விட்டு வைக்கவில்லை.
சூரியன் பின்புலத்தில் கட்டுமான வேலையில் தீவிரமாக ஈடுபடும் தொழிலாளர்கள். இடம்: கரட், மஹாராஷ்டிரா
இத்தாலியின் துரினில் நடந்த ஸ்கேட்டிங் திருவிழாவில் பங்கேற்ற ரஷ்ய மங்கை அலேனா.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் இடம் பெற்றுள்ள இரண்டு பான்டா கரடி குட்டிகள்.
கிருஷ்ணா நதியில் துள்ளி விளையாடிய மீனை லாவகமாக கொத்தி எடுத்து போஸ் கொடுக்கும் மீன்கொத்தி: கரட், மஹாராஷ்டிரா
நியூஸிலாந்தில் உள்ள ஒயிட் ஐலேண்ட் தீவு பகுதியில் எரிமலைக்குழம்பு வெடித்து பீறி செல்லும் காட்சி.
புகையா மேகமா: ஹங்கேரியில் பெக்ஸ் நகரில் பனிமூட்டத்திற்கு நடுவே எழும்பிய அனல்மின்நிலைய புகை.
அழகிய காட்சி ; மேற்குவங்கம் கோல்கட்டாவில் உள்ள ஒரு ஏரியில் மரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் காட்சி.
இந்திய கொடிநாள் தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த அணிவகுப்பில் மரியாதையை ஏற்றார்.
15 வது நிதி கமிஷன் அறிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கமிஷனின் சேர்மன் என்.கே.சிங் சமர்ப்பித்தார்.
நாகலாந்து கலாசாரம், வளம் பாதுகாப்பது தொடர்பான ஹார்ன்பில் திருவிழா மலைவாழ் மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கு நடந்த கலாசார விழாவில் பங்கேற்றவர்கள். இடம்: ஹோகிமா கிராமம்.
கிறிஸ்துமஸ் வருவதை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டுள்ள வாஷிங்டன் வெள்ளை மாளிகை
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணம் கிராஸ் வேலி பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவின் காரணமாக கார் மற்றும் மரக்கிளைகளில் படர்ந்துள்ள பனி.
கிறிஸ்துமஸ் நெருங்குவதை முன்னிட்டு அமெரிக்காவின் பியாவர்கிரீக் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் குழந்தையை கொஞ்சும் சான்டாகிளாஸ்.
பசியில் குப்பைத்தொட்டியில் இருந்து தனக்கு கிடைத்த உணவை ஏக்கத்துடன் ருசிக்கும் குரங்கார். இடம்: புதுடில்லி
கோட்சே குறித்து பிரக்யா தாகூர் தெரிவித்த கருத்தை கண்டித்து டில்லியில் பார்லி., அருகே இளைஞர் காங்., தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
பனி படர்ந்த ஜம்மு காஷ்மீரில் ஆடுகளுடன் செல்லும் சிறார்கள்.
 

Download for free from the Store »

Advertisement