Advertisement

அரசியல்: 03-நவ.,-2019

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை துறை அமைச்சர் ராதகிருஷ்ணன் கோப்பை வழங்கினர். அருகில் கலெக்டர் விஜயகார்த்திகேன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை துறை அமைச்சர் ராதகிருஷ்ணன் கோப்பை வழங்கினர். அருகில் கலெக்டர் விஜயகார்த்திகேன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
விக்ரவாண்டி மற்றும் நான்கு நெறி தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் உடன் சென்னை மெரினா கடற்கரை ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஈபிஎஸ் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள்.
சென்னை மாநகராட்சி சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளம்‍, புயல் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும்போது மீட்பு பணிகளில் ஈடுபட தமிழ்நாடு கமாண்டோ பள்ளி மூலம் பயிற்சி பெற்ற தன்னார்வளர்களுக்கு பேரிடர் மீட்பு உபகரணங்களை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார் வழங்கினார் உடன் (இடமிருந்து) பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி துறை செயலர் ஹன்ஸ்ராஜ், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ்.இடம்: சென்ட்ரல், சென்னை.
தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் தமிழக எல்லை காவலர்களுக்கான விருதினை மா.போ.சி.யின் மகளான மாதவி பாஸ்கரனுக்கு வழங்கிய முதலமைச்சர் ஈபிஎஸ். உடன் (இடமிருந்து) அமைச்சர்கள்செல்லூர் ராஜு, செங்கோட்டையன், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலர் சண்முகம், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சம்பத்.
தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்ப கலைகளை கண்டு ரசித்த முதலமைச்சர் ஈபிஎஸ். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன்.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடந்த புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பலர்.
புதுடில்லி வந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
டில்லி வந்த அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீபன் மின்சன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
புதுடில்லி வந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
புதுடில்லி வந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல்லை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.
மத்திய சுற்றுப்புற, வன மற்றும் தட்பவெப்ப மாறுதல் விஷயங்களுக்கான அமைச்சர் பிரகாஷ் ஜவாடேகர் டில்லி சாஸ்திரி பவனில் எலெக்டரிக் கார் ஒன்றினை ஓட்டினார்.
 

Download for free from the Store »

Advertisement