26 Apr 2020
ஊரடங்கு காரணமாக ஊருக்குள் புகுந்த மயில், உடலளவில் வலிமை வாய்ந்ததே. ஆனால், காகம் மனதளவில் வலிமை கொண்டிருந்ததால், 'சமூக இடைவெளி' எனும் கட்டுப்பாட்டை கடைபிடித்து விரட்டியது. நாமும் மன வலிமையுடன் 'கொரோனா' எனும் கொடியவனை விரட்டி வெற்றி பெருவோம். இடம்: கோவை, காளம்பாளையம்.
26 Mar 2020
இரவு நேரத்தில் கோவை டவுன்ஹால் பகுதியில் பணிபுரியும் ஆர். ஏ. எப்., போலீசாருக்கு பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்து சமைத்த உணவை கொண்டுவந்து வழங்கப்பட்டது.
26 Mar 2020
விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன் குமார் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. அருகில் டி.எஸ்.பி., இளங்கோவன், தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் பாண்டு.
26 Mar 2020
நாடு முழுவதும் உள்ள டோல்கேட்டுகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டதை யொட்டி அத்தியவாசிய சேவை வாகனங்கள் செல்வதற்கு வசதியாக திறந்துவிடப்பட்ட உளுந்தூர்பேட்டை டோல்கேட்.
26 Mar 2020
கொரோனா பாதிப்பு எதிரொலியாக திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரை சுத்தபடுத்த காலையிலே பணிக்கு வந்துள்ள துப்புரவு பணியாளர்கள்.