dinamalar telegram
Advertisement

பிறந்த நாள் பலன்கள்

Share
வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1,10,19,28- A,I,J,Q,Y

• பொறுப்பு காரணமாக அலைச்சல் அதிகரிக்கும்.
• நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
• பொதுநலனுக்காக பாடுபட்டு நற்பெயர் காண்பீர்கள்.
• கலைஞர்களின் வெற்றி வாய்ப்பை பெற்று மகிழ்வர்.
• திருமணம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.
• உடன்பிறந்தவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.


3,12,21,30 -C,G,L,S

• பணவரவு தாமதப்படும். செலவில் சிக்கனம் தேவை.
• குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு தொடங்கும்.
• வீண்வம்பு காரணமாக மற்றவர் ஏச்சுக்கு ஆளாகாதீர்கள்.
• பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்புண்டு.
• உடல் நலனில் அக்கறை தேவை. மருத்துவச் செலவு ஏற்படலாம்.
• வழிபாட்டின் மூலம் நிம்மதியும், அமைதியும் காண்பீர்கள்.


4,13,22,31- D,M,T
• புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
• தொழில், வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம்.
• பணியாளர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
• வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.
• குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
• நண்பர்களுடன் பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.


5,14,23- E,H,N,X

• குறிக்கோளை நோக்கி வேகமாக முன்னேறுவீர்கள்.
• சுபவிஷயத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.
• கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு மறையும்.
• உறவினர் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும்.
• பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.
• வாழ்க்கை துணையின் உடல்நலனில் அக்கறை தேவை.

6,15,24- U,V,W

• சமூகத்தில் அந்தஸ்து மிக்க மனிதராக திகழ்வீர்கள்.
• நீண்ட கால திட்டம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள்.
• பணவரவு அதிகரிக்கும். சேமிக்க வாய்ப்புண்டு.
• தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் லாபம் அடைவீர்கள்.
• கலைத்துறையினருக்கு மதிப்பு, மரியாதை கூடும்.
• அரசியல்வாதிகளின் முயற்சியில் முன்னேற்றம் காண்பர்.


7,16,25- O,Z

• எதிலும் நிதானமும் அக்கறையும் தேவை.
• அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
• எதிர்பாராத சங்கடங்கள், வழக்குகளை சந்திக்க நேரலாம்.
• சகோதர வழியில் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.
• வீடு மாற விரும்புவோருக்கு நல்ல வசதியான இடம் அமையும்.
• அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்ப்பது அவசியம்.


8,17,26- F,P

• எதையாவது நினைத்து குழப்பம் அடைவதை தவிருங்கள்.
• பெண்களுக்கு உறவினர் மூலம் பிரச்னை ஏற்படலாம்.
• நிதி விவகாரங்களில் சீரான நிலை இருக்கும்.
• குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு சுபசெய்தி உண்டு.
• தாயிடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.
* காலியாக இருக்கும் உங்கள் வீட்டிற்குப் புதிய வாடகைதாரர் கிடைப்பர்.
• மகன்/ மகள் கல்வி வகையில் திடீர் செலவு வரும்.


9,18,27

• ஆன்மிக ஈடுபாட்டால் அடிக்கடி கோயிலுக்கு செல்வீர்கள்.
• வீண் விவாதங்களில் ஈடுபடாமல் விலகுவது நல்லது.
• வரவுக்கேற்ப செலவும் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.
• அலுவலகத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறுவீ்ர்கள்.
• மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் குணமாகி வீடு திரும்புவர்.
• புதிதாக செல்போன், லேப்டாப் வாங்க வாய்ப்புண்டு.


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 
Advertisement
Advertisement