dinamalar telegram
Advertisement

மணிகா மீது நடவடிக்கை

Share

இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்களுக்கு உதவ, தேசிய பயிற்சியாளர், 2006 காமன்வெல்த்தில் தங்கம் வென்ற அணியில் இடம் பெற்ற சவுமியாதீப் டோக்கியோ சென்றார். ஆனால் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, தனது பயிற்சியாளர் சன்மேவை போட்டி நேரத்தில் அனுமதிக்க வேண்டும் என்றார். இதை ஏற்க மறுத்த இந்திய ஒலிம்பிக் சங்கம், பயிற்சி நேரத்தில் மட்டும் சன்மே இருக்கலாம் என்றது.

இதனால் கோபமடைந்த மணிகா, போட்டியின் போது பயிற்சியாளர் இல்லாமல் பங்கேற்றார். இரண்டாவது சுற்றில் தோற்று நாடு திரும்புகிறார் மணிகா.

தற்போது இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்திய டேபிள் டென்னிஸ் பொதுச்செயலர் அருண் குமார் கூறுகையில்,''மற்ற வீரர், வீராங்கனைகளைப் போல, தேசிய பயிற்சியாளரை போட்டி நேரத்தில் மணிகா அனுமதித்து இருக்க வேண்டும். இவரது செயல் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. விரைவில் உயர்மட்ட குழு கூடி, மணிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.



பாடம் கற்றேன்: பவானி தேவி

ஒலிம்பிக் வாள்சண்டையில் பங்கேற்ற இந்தியாவின் பவானி தேவி கூறுகையில்,''தொடர்ந்து கடுமையாக போராட வேண்டும் என்பதை டோக்கியோவில் பாடம் கற்றுக் கொண்டேன். இன்னும் சில விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டும். வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு பாடுபடுவேன்,'' என்றார்.



விமானத்தை தவறவிட்ட வினேஷ்

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 26. கடந்த ரியோ ஒலிம்பிக் காலிறுதியில் முழங்காலில் காயமடைந்து 'வீல் சேரில்' நாடு திரும்பினார். இம்முறை சாதிக்க திட்டமிட்டுள்ள இவர், பயிற்சியாளர்களுடன் இணைந்து ஹங்கேரியின் பிராங்க்பர்ட்டில் பயிற்சியில் ஈடுபட்டார். ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ செல்ல, பிராங்க்பர்ட் விமானநிலையம் வந்த வினேஷ் போகத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. அதாவது, வினேஷ் போகத் விசா காலம் 90 நாள் தரப்பட்டு இருந்தது. ஆனால் இது தவறுதலாக கணக்கிடப்பட 91 நாள் ஆகிவிட்டது. உடனடியாக இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணையத்திடம் கூறப்பட்டது. அவர்கள், பிராங்க்பர்ட்டில் உள்ள இந்திய துாதரகத்திடம் பேச, பிரச்னை முடிவுக்கு வந்தது. டோக்கியோ செல்ல அனுமதி தரப்பட்டது,'

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement