dinamalar telegram
Advertisement

கோஹ்லி 'நம்பர்–5': ஐ.சி.சி., 'டி20' தரவரிசையில்

Share

துபாய்: ஐ.சி.சி., 'டுவென்டி-20' போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி, 5வது இடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் (588 புள்ளி), 'சுழல்' வீரர் யுவேந்திர சகால் (551) முறையே 16, 21வது இடத்துக்கு முன்னேறினர். இலங்கைக்கு எதிரான முதல் 'டுவென்டி-20'யில் புவனேஷ்வர், 4 விக்கெட் சாய்த்தார்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா (601), 14வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான கேப்டன் விராத் கோஹ்லி (747), லோகேஷ் ராகுல் (728) முறையே 5, 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். முதலிடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மலான் (841) நீடிக்கிறார்.



கோஹ்லி 'நம்பர்-2': ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் (873 புள்ளி), இந்தியாவின் கோஹ்லி (844), ரோகித் (813) 'டாப்-3' இடத்தில் தொடர்கின்றனர். பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (679) 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 'ஆல்-ரவுண்டர்' பட்டியலில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (238) 9வது இடத்தில் நீடிக்கிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement