dinamalar telegram
Advertisement

நந்து நடேகர் மரணம்: பாட்மின்டன் அரங்கில் சோகம்

Share

புனே: இந்திய பாட்மின்டன் முன்னாள் வீரர் நந்து நடேகர், வயது மூப்பு காரணமாக காலமானார்.

இந்திய பாட்மின்டன் ஜாம்பவான் நந்து நடேகர் 88. கடந்த 1933ல் மஹாராஷ்டிராவில் பிறந்த இவர், துவக்கத்தில் டென்னிஸ் போட்டியில் விளையாடினார். இருபது வயதில் பாட்மின்டனில் காலடி வைத்த இவர், தாமஸ் கோப்பையில் 10 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணியை வழிநடத்தினார். ஆல் இங்கிலாந்து ஓபனில் (1954) காலிறுதி வரை சென்றிருந்த இவர், சர்வதேச பாட்மின்டனில் (1956, கோலாலம்பூர், மலேசியா) வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். கடந்த 1961ல் அர்ஜுனா விருது கிடைத்தது. பாங்காக்கில் நடந்த (1962) கிங்ஸ் கோப்பை கலப்பு இரட்டையரில் சகவீராங்கனை மீனா ஷா உடன் இணைந்து கோப்பை வென்ற இவர், ஜமைக்காவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் (1965) இந்தியா சார்பில் பங்கேற்றார். தேசிய சாம்பியன்ஷிப் ஒற்றையரில் 6, இரட்டையரில் 6, கலப்பு இரட்டையரில் 5 பட்டம் வென்ற இவர், ஒட்டுமொத்தமாக 100 பட்டங்களுக்கு மேல் கைப்பற்றினார்.

மஹாராஷ்டிரா பாட்மின்டன் சங்க தலைவராக (1990-94) இருந்த நந்து நடேகர், வயது மூப்பு காரணமாக நேற்று புனேயில் உள்ள காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், இந்திய பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த், முன்னாள் பயிற்சியாளர் விமல் குமார், இந்திய பாட்மின்டன் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்து நடேகரின் மகன் பிரபல டென்னிஸ் வீரர் கவுரவ் நடேகர். இவர், தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 7 முறை பட்டம் வென்றுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement