dinamalar telegram
Advertisement

மந்தனா அரைசதம் விளாசல்

Share

கார்டிப்: இங்கிலாந்தில் நடக்கும் 'தி ஹன்ரடு' தொடருக்கான லீக் போட்டியில் இந்தியாவின் மந்தனா அரைசதம் விளாசினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் புதிய முயற்சியாக 'தி ஹன்ரடு' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் தலா 100 பந்து வீசப்படும். இதன் பெண்கள் தொடரில் இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, தீப்தி சர்மா என, 5 பேர் பங்கேற்கின்றனர்.

கார்டிப் நகரில் நடந்த லீக் போட்டியில் 'வெல்ஷ் பயர்' அணி 100 பந்தில், 7 விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்தது. ஹேலி மாத்யூஸ் 33 ரன் எடுத்தார். பின் களமிறங்கிய 'சதர்ன் பிரேவ்' அணிக்கு ஸ்மிருதி மந்தனா, 39 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 61* ரன் எடுத்து கைகொடுக்க, 84 பந்தில் 2 விக்கெட்டுக்கு 112 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருதை மந்தனா வென்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement